"விஜய் 62" படம் குறித்து வெளியான புதிய தகவல்...!
'மெர்சல்' திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதத்திற்கு முன் துவங்கி, மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், திரைப்பட துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பு மார்ச் 1 ஆம் தேதி முதல் நிருத்தப்பட்டது.
தற்போது தமிழ் திரைப்பட ஸ்டிரைக் முடிவிற்கு வந்து விட்ட நிலையில் தொடர்ந்து புதிய படங்களின் ரீலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தளபதி விஜய் நடித்து வரும் 62வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் வரும் 25 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், அதில் இந்த படத்தில் துணிச்சலான அரசியல் வாதியாக நடிக்க உள்ள நடிகை வரலட்சுமி சரத் குமாரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.