வில்லி, ஹீரோயின் என சகலவிதமான கேரக்டர்களிலும் கெத்து காட்டுபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குடும்பத்தின் வாரிசான இவர், மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பளீச்சென பேசக்கூடியவர். திரைத்துறையில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். அதற்காக சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன் என்று கூறியுள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: திருமாவை வெறுப்பேத்த திரெளபதி டி-சர்ட்டில் போஸ் கொடுத்த காயத்ரி... வைரலாகும் வெறித்தனமான போட்டோ...!

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் தான் பிரபல வாரிசு நடிகையாக இருந்தாலும், அந்த அவலம் எனக்கு ஏற்பட்டது. படங்களில் நடிக்க வேண்டும் என்றால், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனால் நிறைய பட வாய்ப்புகள் கையை விட்டு போனாலும் கவலைப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள்"... திரெளபதி விஷயத்தில் பலித்துவிட்டதா பா.ரஞ்சித் வாக்கு??

என்னிடம் அட்ஜெஸ்ட் செய்ய சொல்லி பேசியவர்களின் ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாக கூறியுள்ள வரலட்சுமி, எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக பேசியுள்ளார்.