நாடு முழுவதும் கடந்த 21ம் தேதி மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிவனுக்குரிய இந்த நாளில் விரதம் இருந்து வணங்குபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பகலில் விரதம் இருக்கும் பக்தர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுவர்.  

இதையும் படிங்க: "தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள்"... திரெளபதி விஷயத்தில் பலித்துவிட்டதா பா.ரஞ்சித் வாக்கு??

தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் மகா சிவராத்திரியை கொண்டாட குவியும் பக்தர்கள் ஏராளம். பிரபல சாமியாரின் ஆனந்த நடனத்தை காணவும், ஆசிபெறவும் வெளிநாடுகளில் இருந்து கூட மலை மேல் இருக்கும் அந்த வழிபாட்டு தலத்திற்கு பக்தர்கள் குவிகின்றனர். 

நள்ளிரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நீடிக்கும் அந்த ஆனந்த நடன நிகழ்ச்சியில் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளும் பங்கேற்பது வழக்கம். அதன்படி தான் இந்த முறை நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென நயனிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் தான் நடிச்ச படத்தோட புரோமோஷனுக்கே போகமாட்டாங்க. சாமியார் கூப்பிட்டால் போயிடுவாங்களா??. நான் கேரளாவைச் சேர்ந்த திருவல்லா சிரியன் கிறிஸ்டியன் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு, இருந்தாலும் எல்லா மத நிகழ்ச்சிகளையும் பங்கேற்று வருகிறேன். அப்படித்தான் மூக்குத்தி அம்மன் படத்திற்காக கூட கோவில், கோவிலாக போய் வழிபாடு நடத்தினேன். 

இதையும் படிங்க: அமைச்சருக்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சி கிளப்பிய பிரபல நடிகை... அதிரவைக்கும் ஹாட் போட்டோஸ்...!

ஆனால் சாரி... நீங்க கூப்பிட இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முடியாது. தலைவர் படத்தோட ஷூட்டிங் இருக்குன்னு சொல்லி நைஸா எஸ்கேப் ஆக ட்ரை பண்ணியிருக்காங்க. இதைகேட்ட சாமியார் தரப்பு ஆட்கள், எங்க பவர் தெரியாமல் பேசுறீங்க... நாங்க யார் தெரியுமா? நாங்க நினைச்சால் என்ன நடக்கும் தெரியுமா? என்றெல்லாம் மிரட்டியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் எடுத்த முடிவில் உறுதியாக இருந்த நயன், அந்த நிகழ்ச்சியில் கடைசிவரை பங்கேற்கவே இல்லை.