பழைய வண்ணாரப் பேட்டை தொடர்ந்து, மோகன் ஜி இயக்கியுள்ள திரைப்படம்‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாடக காதல் தோலுரிக்கும் படம் என்று கூறப்படும்  இந்த படம் முதலில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. 

இதையும் படிங்க: அமைச்சருக்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சி கிளப்பிய பிரபல நடிகை... அதிரவைக்கும் ஹாட் போட்டோஸ்...!

நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன திரெளபதி படத்திற்கு தியேட்டர்களில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான தியேட்டர்களில் மஞ்சள் டிசர்ட் அணிந்த இளைஞர்கள் பட்டாளத்தை நிறைய காண முடிகிறது. இதை பார்க்கும் பலரும் ஒரு சமூகத்தினர் மட்டுமே திரெளபதி படத்திற்கு அதிக ஆதரவு கொடுப்பதாக கூறிவருகின்றனர். 

இதையும் படிங்க: "தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள்"... திரெளபதி விஷயத்தில் பலித்துவிட்டதா பா.ரஞ்சித் வாக்கு??

இந்நிலையில் இந்த படத்திற்கு விளம்பரம் செய்யும் விதமாக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், திரெளபதி படத்தின் டி-சர்ட்டை அணிந்து கொண்டு டக்கர் போஸ் கொடுத்துள்ளார். கண்ணில் ஸ்டைலாக கூலிங்கிளாஸ், கறுப்பு கலர் ஜூன்ஸ் சகிதமாக காயத்ரி ரகுராம் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் திரெளபதி படத்தில் நடித்த ரிச்சட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள காயத்ரி, பெண்கள் சம்பந்தப்பட்ட இந்த கதையில் நடித்ததற்கு நன்றி. இந்த காலத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே திருமாவளவனையும், விசிகவினரையும் நேரடியாக அட்டாக் செய்து வந்த காயத்ரி ரகுராம். திரெளபதி படத்திற்கு ப்ரீ புரோமோஷன் செய்து மேலும் கடுப்பேற்றியுள்ளார்.