எலான் மஸ்க் அவர்களே... ட்விட்டர் மூலம் உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள் - கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

ட்விட்டர் நிறுவனத்தின் அதிபராகி உள்ள எலான் மஸ்க்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து அவருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

Vairamuthu request Elan Musk to bring thoughtful order to our world culture through twitter

உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். இவர் உலகளவில் பலகோடி மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி உள்ளார். அவர் ட்விட்டர் நிறுவனத்தின் அதிபரான பிறகு உடனடியாக அதன் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் நிதிப்பிரிவு அதிகாரியை பணியில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக முடக்கம் செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். எலான் மஸ்கின் இந்த நடவடிக்கைக்கு ட்ரம்ப் நன்றியும் தெரிவித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்.... லெஜண்டுக்கு கிடைச்ச வரவேற்பு கூட பிரின்ஸ் படத்துக்கு கிடைக்கலயே.. பாக்ஸ் ஆபிஸில் அண்ணாச்சியிடம் தோற்றுப்போன SK

Vairamuthu request Elan Musk to bring thoughtful order to our world culture through twitter

இவ்வாறு அடுத்தடுத்து ட்விட்டரில் புதிய நடைமுறைகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ள எலான் மஸ்க் அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் டுவிட்டரில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர போகிறார் என்பதை தெரிந்துகொள்ள அதன் பயனர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் அதிபராகி உள்ள எலான் மஸ்க்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து அவருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார். அதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே! இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். 

வலதுசாரி இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும், மலிந்த மொழிக்கும், இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்” என பதிவிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்.... துணிவு படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. ரிலீசுக்கு முன்பே அஜித் படத்துக்கு குவியும் வசூல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios