Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை திட்டியதால் ரயிலை வழிமறித்த ரசிகர்கள்...மன்னிப்பு கேட்ட வடிவுக்கரசி

விஜயகாந்த் போல தாராள மனம் கொண்டவர் கார்த்தி என்றும் தேனி மக்கள் அனைவரையும் அரவணைக்கும் பண்பால் மிக உயர்ந்துவிட்டார் என கார்த்திக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

vadivukkarasi remembering about rajinikanth arunachalam movie
Author
First Published Sep 5, 2022, 6:54 PM IST

கமலஹாசனின் சிவப்பு ரோஜாக்கள் துவங்கி கார்த்தியின் விருமன் படம் வரை கிட்டத்தட்ட 350 படங்களுக்கு மேல் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. அதோடு 40க்கு மேற்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் இவர். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமானவராக இருக்கிறார். அதிகமாக இவரை எதிர்மறை கேரக்டரில் தான் காண முடிந்தது. இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை தரித்து ரசிகர்களை பதைப்பதைக்க வைக்கும் வசனங்களை பேசி திரை உலகில் பிரபலமானவர் வடிவுக்கரசி.

vadivukkarasi remembering about rajinikanth arunachalam movie

மேலும் செய்திகளுக்கு...அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகள்...ஜடாமுடியுடன் பிரபல நடிகர்

சமீபத்தில் இவர் கார்த்தியின் விருமன் படத்தில் நாயகனின் அப்பத்தாவாக நடித்திருந்தார். பிரகாஷ்ராஜுக்கு தாயாக நடித்திருந்த இவரை நீண்ட நாள் கழித்து திரையில் கண்ட ரசிகர்கள் பாராட்டுகளை குவித்திருந்தனர். ஒவ்வொரு வசனத்தையும் நறுக்கென பேசி தனது வில்லிக்கான கதாபாத்திரத்தை படத்தில் வேரூன்ற வைக்கும் திறன் கொண்ட வடிவுக்கரசி, தற்போது சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் பாட்டியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் பிரபல இணையதளம் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில் ரஜினி ரசிகர்கள் குறித்து பேசி இருப்பது வைரலலாகி வருகிறது. முன்னதாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அருணாச்சலம் படத்தில் ரஜினியின் பாட்டியாக வந்து மாஸ் காட்டி இருப்பார் வடிவுக்கரசி. கூன் விழுந்த மிகவும் முதிய தோற்றத்தை தரித்து இவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் பார்ப்பவர்களை கோபமூட்டும் அளவிற்கு வெறித்தனமாக அமைந்திருந்தது. அதில் ரஜினியை பார்த்து "அனாதை நாயே வெளியே போ" என்னும் வசனத்தை ஆக்ரோஷம் பொங்க பேசியிருப்பார் வடிவுக்கரசி.

மேலும் செய்திகளுக்கு...குட்டை டவுசர்... சிம்மிஸுடன் பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஜான்வி கபூர்

vadivukkarasi remembering about rajinikanth arunachalam movie

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் இவர் சென்ற ரயிலை வழிமறித்து மன்னிப்பு கேட்காவிட்டால் எழுந்திருக்க மாட்டோம் என தண்டவாளத்தில் படுத்து விட்டார்களாம். இதை தொடர்ந்து ரசிகர்களிடம் இனிமேல் இதுபோன்ற வசனங்களை பேசமாட்டேன் எனக் கூறி வடிவுக்கரசி மன்னிப்பு கேட்டதை அடுத்து அங்கிருந்து கலைந்து  சென்றுள்ளார்கள் ரஜினியின் ரசிகர்கள். இந்த சுவாரஸ்சிய நிகழ்வை தற்போது பகிர்ந்து  கொண்டுள்ளார் வடிவுக்கரசி.

மேலும் செய்திகளுக்கு..வேற லெவல் கிளாமர் லுக்கில் கலக்கும் ஆண்ட்ரியா... ஒரு பக்கம் மட்டும் ஸ்ட்ரிப் அணிந்து ஹாட் போட்டோ சூட்...

அதோடு முன்னதாக தன் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட கார்த்தியுடன் நடித்து விட்டதாகவும் தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் மிகவும் நகைச்சுவை திறன் கொண்டவர்.  தனக்கும் நகைச்சுவை என்றால் மிகவும் பிடிக்கும் அதன் காரணமாக அவருடன் நடிக்க ஆசையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் வடிவுக்கரசி. மேலும் விஜயகாந்த் போல தாராள மனம் கொண்டவர் கார்த்தி என்றும் தேனி மக்கள் அனைவரையும் அரவணைக்கும் பண்பால் மிக உயர்ந்துவிட்டார் என கார்த்திக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios