அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகள்...ஜடாமுடியுடன் பிரபல நடிகர்

இன்று இந்த படத்தில் ஒற்றராக வரும் ஜெயராமின் போஸ்டர் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது ஜடாமுடியுடன் இருக்கும் கிஷோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

introducing of  kishor as  Ravidasan role in ponniyin selvan movie

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இறுதியாக செக்கச் சிவந்த வானம் என்னும் படத்தை இயக்கி இருந்தார் மல்டி ஸ்டார் படமான இதில் விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, அரவிந்த்சாமி என நான்கு நாயகர்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த படம் 42 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி சுமார் ரூ. 91 கோடிகளை நுழைவுச்சீட்டு வாயிலாக பெற்று பாக்ஸ் ஆபீசிலும் பட்டியை கிளப்பியது.

இதை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது.  திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலரின் கனவு படமாக இருந்த  கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவியே இந்த படம் உருவாக்கப்படுகிறது. முன்னதாக எம்ஜிஆர், உலகநாயகன் என பலரும் முயற்சித்த இந்த கனவு படத்தை மணிரத்தினம் தற்போது நினைவாக்கியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...குட்டை டவுசர்... சிம்மிஸுடன் பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஜான்வி கபூர்

introducing of  kishor as  Ravidasan role in ponniyin selvan movie

இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி சிவகுமார், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர். படத்தில் முக்கிய நாயகனாகன சோழ இளவரசனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். அருள்மொழி வர்மனாக வரும் இவருக்கு சகோதரனாக ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடித்துள்ளார். சோழனின் தோழன் வந்திய தேவனாக வருகிறார் கார்த்தி. பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சன் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடித்த வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு..வேற லெவல் கிளாமர் லுக்கில் கலக்கும் ஆண்ட்ரியா... ஒரு பக்கம் மட்டும் ஸ்ட்ரிப் அணிந்து ஹாட் போட்டோ சூட்...

இவர்கள் அனைவரது போஸ்டர்களும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டது. இன்று இந்த படத்தில் ஒற்றராக வரும் ஜெயராமின் போஸ்டர் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது ஜடாமுடியுடன் இருக்கும் கிஷோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த போஸ்டரில் பாண்டியன் கொலையாளி தன் குத்துவாளை பயன்படுத்துவதன் மூலம் கவனிக்க வேண்டியவர். இதோ வருகிறார் ரவிதாசன் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு...லேட்டா கிடைச்சாலும் .. பெஸ்டா கிடைத்தது..விருது குறித்து சித்தார்த் உருக்கம்

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவிற்கு உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. மணிரத்தினத்தின் நாயகன் படத்தில் கமலஹாசனும், தளபதி படத்தில் ரஜினியும் நடித்ததன் மூலம் இவர்களது சினிமா பயணத்தில் புதிய திருப்புமுனையை கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 <

/p>

பொன்னியின் செல்வன் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடுத்தடுத்து நடைபெற்று படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது. தற்போது ரசிகர்கள் படத்தின் டிரைலரை காண உற்சாகமாக காத்திருக்கின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios