Asianet News TamilAsianet News Tamil

தீபாவளிக்கு திரையரங்குகளை மூட வேண்டும்! உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பரபரப்பு..!

இந்த தீபாவளியை ஸ்பெஷலாக்கும் விதமாக தலைவரின் 'அண்ணாத்த' படம் முதல், சில முக்கிய நடிகரின் படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், திடீர் என திரையரங்குகளை மூட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Theaters should be closed for diwali thhe case is being prosecuted in the madurai High Court
Author
Chennai, First Published Oct 30, 2021, 6:31 PM IST

இந்த தீபாவளியை ஸ்பெஷல்லாக்கும் விதமாக தலைவரின் அண்ணாத்த படம் முதல், சில முக்கிய நடிகரின் படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், திடீர் என திரையரங்குகளை மூட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: சரிந்து விழும் சேலையை சரி செய்யாமல்... மெல்லிய இடையை காட்டி கவர்ச்சி ட்ரீட் வைத்த வாணி போஜன்! போட்டோஸ்..

கொரோனா முதல் அலை காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாகவே சரி வர திரையரங்குகள் இயங்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும்... தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து, திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், மால்கள் உள்ளிட்டவை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

Theaters should be closed for diwali thhe case is being prosecuted in the madurai High Court

கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக... மற்ற தொழிலாளர்களை விட அதிக நஷ்டத்தை சந்தித்தது திரையரங்க உரிமையாளர்கள் தான். கொரோனா இரண்டாவது அலை தலை தூக்கிய பின்னர், சுமார் 2 மாதங்களுக்கு பின் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், திரையரங்கில் வெளியான, டாக்டர், உள்ளிட்ட படங்கள் வசூலில் கெத்து காட்டியது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களை விட, டாக்டர் படம் அதிக வசூல் சாதனை படைத்தது.

மேலும் செய்திகள்: அச்சு அசல் தாத்தா ரஜினிகாந்தை உரித்து வைத்தது போல் போஸ் கொடுத்த பேரன்..! வைரலாகும் புகைப்படம்..!

 

Theaters should be closed for diwali thhe case is being prosecuted in the madurai High Court

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், அண்ணாத்த படம் இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில்... பல திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தலைவரின் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீசுக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், திடீர் என மக்கள் தொகை அதிகமாக திரையரங்கில் கூடினால் கொரோனா  தலை தூக்க வாய்ப்புள்ளதாக கூறி மதுரை உயர் நீதி மன்றத்தில், நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திரையரங்குகளை மூட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: கடவுளே... இது என்ன கொடுமை! புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு கதறி அழுத பிரபலங்கள்!

 

Theaters should be closed for diwali thhe case is being prosecuted in the madurai High Court

மேலும் செய்திகள்: பார்த்தாலே பக்குனு ஆகுதே... ராஷ்மிகாவா இப்படி? பாவாடை மட்டும் கட்டி 'ரங்கஸ்தலம்' சமந்தாவையே பீட் பண்ணீட்டாங்க!

கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை ஒரு பக்கம் வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திரையரங்கை மூட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த மனு மீதான விசாரணை மதுரை உயர் நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios