- Home
- Cinema
- பார்த்தாலே பக்குனு ஆகுதே... ராஷ்மிகாவா இப்படி? பாவாடை மட்டும் கட்டி 'ரங்கஸ்தலம்' சமந்தாவையே பீட் பண்ணீட்டாங்க!
பார்த்தாலே பக்குனு ஆகுதே... ராஷ்மிகாவா இப்படி? பாவாடை மட்டும் கட்டி 'ரங்கஸ்தலம்' சமந்தாவையே பீட் பண்ணீட்டாங்க!
நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika mandanna) இதுவரை எந்த படத்திலும் காட்டாத அளவிற்கு, கவர்ச்சியை 'புஷ்பா' (Pushpa movie) படத்தில் காட்டியுள்ளார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'சாமி சாமி' பாடலின் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகி படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கீதா கோவிந்தம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இல்லாது தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் நாகையாக அறிமுகமானார்.
ஏற்கனவே, கன்னடம், தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், பாலிவுட் திரையுலகிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிக்கா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடுவது, மற்றும்... அவ்வப்போது கண்ணை கவரும் உடையில் பளீச் போஸ் கொடுத்து மனதை வசீகரித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை காட்டாக அளவிற்கு கவர்ச்சியை 'புஷ்பா' படத்திற்காக வாரி வழங்கியுள்ளார் ராஷ்மிகா. இந்த படத்தின் ஹாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும் மரம் கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தான் 'புஷ்பா' திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்திற்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் நாயகி ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரம் குறித்து படக்குழு அறிவித்தது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பாவாடை ஜாக்கெட்டுடன் அமர்ந்து திருமணத்திற்கு தயாராவது போல் ராஷ்மிகா இருந்தார். இதை தொடர்ந்து வெளியானயான 'சாமி சாமி' பாடலில் ரங்கஸ்தலம் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.