விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி67 படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இதில், அர்ஜூன், த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படம் தளபதி67. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். மனோஜ் பரமஹம்சா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பிலோமின் ராஜ் இந்தப் படத்தை எடிட் செய்கிறார். இதெல்லாம் ஏற்கனவே வெளி வந்த அதிகாரப்பூர்வ தகவல்.

இது கர்ஜிக்கும் நேரம்: தளபதி67 படத்தில் இணைந்த ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்!

இதே போன்று இந்தப் படத்தில், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூல் அலிகான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஆகியோர் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அட்ராசக்க... 14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கில்லி ஜோடி..! தளபதி 67-ல் திரிஷாவுக்கு இப்படி ஒரு ரோலா?

அதன்படி, தளபதி67 படத்தில் த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி என்றும், தளபதி67 படத்தின் பாடல்களை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து நீங்கள் கேட்கலாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் பிறகு தளபதி67 படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

Scroll to load tweet…

அடேங்கப்பா... தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

மிக பிரமாண்டமாக நடந்த தளபதி67 படத்தின் பூஜையில், த்ரிஷா மங்களரமாக மஞ்சள் நிற புடவையில் தலையில் மல்லிப் பூ வைத்து வந்திருந்தார். விஜய், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், குழந்தை நட்சத்திரம், சாண்டி மாஸ்டர், ஜார்ஜ் மரியன் உள்பட மற்ற நடிகர், நடிகைகள் என்று பலரும் கலந்து கொண்டனர். ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், விஜய்யின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார்.

'மார்பகத்தைப் பெரிதாக்க சொன்னாங்க' பாலிவுட் இயக்குநர் குறித்து பகீரங்கமாக போட்டுடைத்த நடிகை சமீரா ரெட்டி

சென்னை மற்றும் மூணாறு ஆகிய பகுதிகளில் தளபதி67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் இன்று தொடங்கியுள்ளது. இதற்காக 180 பேர் கொண்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். அங்கு, பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Scroll to load tweet…

கடந்த மாதம் ஜனவரி 2ஆம் தேதியே தளபதி67 படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 23 ஆம் தேதி தளபதி67 படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தளபதி67 படத்தில் கமல் ஹாசன், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரும் நடிக்க இருப்பதாக முதலில் விக்கிப் பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரத்திற்குள்ளாகவே அது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 67 Movie Poojai | Thalapathy Vijay | Sanjay Dutt | Trisha | Anirudh | Lokesh Kanagaraj