MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா... தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

அடேங்கப்பா... தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

விஜய்யின் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : Ganesh A
Published : Feb 01 2023, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். இவர் தற்போது வில்லன் வேடங்களில் கலக்கி வருகிறார். கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதீரா என்கிற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் சஞ்சய் தத். கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சஞ்சய் தத்துக்கு பிறமொழி படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

24

அந்த வகையில், நடிகர் சஞ்சய் தத், தற்போது தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் சஞ்சய் தத். தளபதி 67 படத்தில் சஞ்சய் தத் நடிப்பதை படக்குழு நேற்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தளபதி 67 படத்தின் ஒன்லைன் கேட்டதும் அப்படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டதாக சஞ்சய் தத் தெரிவித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... அட்ராசக்க... 14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கில்லி ஜோடி..! தளபதி 67-ல் திரிஷாவுக்கு இப்படி ஒரு ரோலா?

34

இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் சஞ்சய் தத். தற்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் 180 பேருடன் தனி விமானத்தில் நேற்று காஷ்மீர் சென்ற படக்குழு, இன்று முதல் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. குறிப்பாக அங்கு விஜய் - சஞ்சய் தத் இடையேயான காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

44

இந்நிலையில், தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவர் ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. வில்லனாக நடிக்க அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இது என்று கூறப்படுகிறது. சஞ்சய் தத் நடித்து வருவதால் தளபதி 67 படத்துக்கு இந்தியிலும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ‘ஏகே 62’ கதை கேட்டு செம்ம ஹாப்பி ஆன அஜித்... பிரம்மாண்ட சம்பளம் கொடுத்து மகிழ் திருமேனியை லாக் செய்த லைகா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image2
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image3
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved