அட்ராசக்க... 14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கில்லி ஜோடி..! தளபதி 67-ல் திரிஷாவுக்கு இப்படி ஒரு ரோலா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாரிசு படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி 67. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அப்டேட்டுகள் கடந்த இரு தினங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன்படி சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளதை அறிவித்ததோடு, இன்றும் அடுத்தகட்ட அப்டேட்டுகள் வெளியாகும் என்பதை குறிப்பிட்டிருந்தனர். இன்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தளபதி 67 படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... ‘ஏகே 62’ கதை கேட்டு செம்ம ஹாப்பி ஆன அஜித்... பிரம்மாண்ட சம்பளம் கொடுத்து மகிழ் திருமேனியை லாக் செய்த லைகா
அதன்படி நடிகை திரிஷா தான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா தற்போது 5-வது முறையாக விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இதன்மூலம் 14 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யும், திரிஷாவும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.
இதுகுறித்து நடிகை திரிஷா தெரிவித்துள்ளதாவது : “இந்த பெருமைமிகு புராஜக்டில் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. அதுவும் எனக்கு பிடித்த மனிதர்களும், திறமை வாய்ந்த டீமும் இருக்கிறார்கள். அற்புதமான நேரம் வரவிருக்கிறது” என நெகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார் திரிஷா. தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மஞ்சள் நிற சேலையில் தங்கம் போல் மின்னும் பிரம்மாண்டத்தின் மகள்... வைரலாகும் அதிதி ஷங்கரின் கியூட் போட்டோஸ்