- Home
- Cinema
- ‘ஏகே 62’ கதை கேட்டு செம்ம ஹாப்பி ஆன அஜித்... பிரம்மாண்ட சம்பளம் கொடுத்து மகிழ் திருமேனியை லாக் செய்த லைகா
‘ஏகே 62’ கதை கேட்டு செம்ம ஹாப்பி ஆன அஜித்... பிரம்மாண்ட சம்பளம் கொடுத்து மகிழ் திருமேனியை லாக் செய்த லைகா
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 திரைப்படம் ரூ.220 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் அஜித் நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. விரைவில் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், திடீரென அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்கு திருப்தி அளிக்காத காரணத்தால், அவர் இயக்குனரை மாற்றும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. குறிப்பாக மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவரை கமிட் செய்துள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... மஞ்சள் நிற சேலையில் தங்கம் போல் மின்னும் பிரம்மாண்டத்தின் மகள்... வைரலாகும் அதிதி ஷங்கரின் கியூட் போட்டோஸ்
மகிழ் திருமேனி - அஜித் கூட்டணியில் உருவாக உள்ள ஏகே 62 திரைப்படம் ரூ.220 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து, இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆகியுள்ள இயக்குனர் மகிழ் திருமேனிக்கு லைகா நிறுவனம் பிரம்மாண்ட தொகையை சம்பளமாக கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை அவர் வாங்கி வந்த சம்பளத்தை விட டபுள் மடங்கு அதிக சம்பளத்தை ஏகே 62 படத்துக்காக மகிழ் திருமேனி வாங்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இதற்கு முன்னதாக தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் முடிந்ததும் கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு... நடிகையாக களமிறங்குகிறார் ஷிவின்..!