பிக்பாஸ் முடிந்ததும் கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு... நடிகையாக களமிறங்குகிறார் ஷிவின்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவின் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டாலும், அவருக்கு தற்போது பிரம்மாண்ட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. இதில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ.50 லட்சத்துக்காண காசோலை, பிக்பாஸ் டிராபி மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக விக்ரமனுக்கு இரண்டாவது இடமும், ஷிவினுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. இதன்மூலம் தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் திருநங்கை போட்டியாளர் என்கிற பெருமையையும் பெற்றார் ஷிவின்.
சிங்கப்பூரை சேர்ந்த ஷிவின், அங்கு ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பிக்பாஸ் போட்டியாளராக களமிறக்கப்பட்டனர். அதில் ஒருவராக தேர்வானவர் தான் ஷிவின்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் முதல் தளபதி 67 வரை... கைவசம் அரை டஜன் படங்கள் - வியக்க வைக்கும் அனிருத்தின் லைன் அப் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவின் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டாலும், அவருக்கு தற்போது பிரம்மாண்ட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால், விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடரான பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் வாய்ப்பு ஷிவினுக்கு கிடைத்தி இருக்கிறது. இதன்மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளார் ஷிவின்.
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், அதில் கெஸ்ட் ரோலில் தான் ஷிவின் நடித்துள்ளார் போல தெரிகிறது. இதேபோல் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த ஜனனி, லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடிக்க கமிட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட கமல்ஹாசன்... நைசாக ஆண்டவருக்கே டிமிக்கி கொடுத்த தளபதி..!