நடிகர் விக்ரம் 'கடாரம் கொண்டான்' படத்தை தொடர்ந்து, தன்னுடைய மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமான, 'ஆத்யா வர்மா' படத்தின் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது  நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் கொல்கத்தாவிலும் நிறைவடைந்தது. மூன்றாம் கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்ற போது, உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் உடனடியாக இந்தியா திரும்பினர். 

 

இதையும் படிங்க: பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

விக்ரமின் 58 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை 7 க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக, கே.ஜி.எப். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிக்கிறார். இந்த படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “டிமாண்டி காலனி”, “இமைக்கா நொடிகள்” என வித்தியாசமான கதைகளை கையாண்ட அஜய் ஞானமுத்துவுடன் சீயான் விக்ரம் கைகோர்த்துள்ளதால் ஒட்டு  மொத்த திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. 

இதையும் படிங்க:  ஆசன வாயில் லத்தியை சொருகி... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த திரைப்பிரபலங்கள்...!

படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஏற்கனவே அறிவித்திருந்த படி இன்று மாலை அசத்தலான ஒரு அறிவிப்பை வெளியிட்டு சீயான் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது படக்குழு. அதாவது ஜூன் 29ம் தேதி மாலை 5 மணிக்கு கோப்ரா படத்தின் முதல் பாடலான தும்பி துள்ளல் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். அஜித்தின்  “வலிமை” பட அப்டேட் கேட்டு போனிகபூரையும், விஜய்யின் “மாஸ்டர்” பட அப்டேட் கேட்டு லோகேஷ் கனகராஜையும் ரசிகர்கள் துளைத்தெடுத்துவிட்டனர். ஆனால் பிட்டு தகவல் கூட தேறவில்லை. இதனால் தல, தளபதி ரசிகர்கள் நொந்து போயிருக்கும் இந்த நேரத்தில் கேட்காமலே அப்டேட் கொடுத்து அசத்தியுள்ளார் நம்ம சீயான் விக்ரம்.