“சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட குட்டி பாப்பாக்கள் பலரும் ஹீரோயின் அவதாரம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர். அதனால் பட வாய்ப்பிற்காக கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் தங்களது போட்டோஸை பதிவிட்டு வருகின்றனர். அப்படி சிறுத்தை படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ரக்ஷனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் “சிறுத்தை”. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி, திருடன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்து கார்த்தி கலக்கியிருப்பார்.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் 2006ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான “விக்ரமர்குடு” என்ற படத்தை தான் “சிறுத்தை” என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார்கள்.
பையா படத்திற்கு பிறகு கார்த்தி, தமன்னா காம்பினேஷனில் வெளியான “சிறுத்தை” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ரத்னவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் கார்த்தி முதன் முறையாக போலீஸ் கெட்டப்பில் கெத்து காட்டியிருப்பார்.
இந்த படத்தில் கார்த்திக்கு மகளாக ரக்ஷனா என்ற 5 வயது சிறுமி நடித்திருந்தார். அம்மாவை இழந்து அப்பாவின் பாசத்தில் வளர்ந்த செல்லக்குட்டி பெண்ணாக வலம் வந்த அந்த குழந்தை நட்சத்திரம் ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது.
ரக்ஷனா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த ‘ஓகே கண்மணி’, ‘பாண்டிய நாடு’ ,‘கடல்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.
5 வயது சிறுமியாக “சிறுத்தை” படத்தில் கலக்கிய ரக்ஷனா அழகி போட்டி ஒன்றில் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
செம்ம க்யூட் லுக்கில் மேடையில் அன்னநடை நடந்து வந்த ரக்ஷனாவின் அழகை கண்ட ரசிகர்கள் பலரும் கண் பட்டுவிடப்போகிறது சுத்திப்போடுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகுடன் ரக்ஷனா
அழகி போட்டியில் செம்ம கெத்தாக கொடுத்த க்யூட் போஸ்