இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 12ம் தேதியே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரபல தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்திருக்கும் ஹனுமான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் தேஜாவின் நாயகியாக நடிகை அமிர்த அய்யர் நடித்திருக்கிறார். 

மேலும் பிரபல தமிழ் நடிகை வரலட்சுமி சரத்குமார், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவில், மூன்று இசையமைப்பார்கள் இணைந்து இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள் : திடீர் என நிறுத்தப்பட்ட சன் டிவி 'தாலாட்டு' சீரியல்..! என்ன காரணம்?

இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 12ம் தேதியே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்திற்கு அவ்வப்போது தொடர்ச்சியாக வரும் சிக்கல்கள் காரணமாக தற்பொழுது மீண்டும் இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

இந்த திரைப்படம் எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி நிச்சயம் வெளியாகும் என்று கூறி இந்த பட குழு ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் வருமா இந்த படத்திற்காக எனது வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளை செலவிட்டு உள்ளேன், நிச்சயம் இன்னும் ஆறு மாதம் செலவிட்டு இதை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பேன் என்று கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள் : 'மாமன்னன்' பட வெற்றி - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!