தி லெஜண்ட் ரிலீஸ்...4 மாவட்ட விடுமுறை..கொண்டாட்டத்தில் சரவணன் அருள்..

வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தி லெஜெண்ட் படத்திற்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu government announcement in favor of The Legend film

தமிழகத்தில் பிரம்மாண்ட வணிகஸ்தலமாக உருவெடுத்துள்ள சரவணா ஸ்டோர் முதலாளி சரவணன் அருள் நடித்துள்ள தி லெஜண்ட் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ள இந்த படத்தை பான் இந்தியா படம் என படக் குழு கொண்டாடி வருகிறது. இவரது முந்தைய விளம்பரங்களை தயாரித்த ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் தான் தி லெஜெண்ட்  படத்தை உருவாக்கியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...ஒருபக்கம் அப்டேட்ஸ்.. மறுபக்கம் குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் தனுஷ் - வைரல் போட்டோஸ் !

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நாயகியாகவும், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். அறிவியல் புனை கதையாக கூறப்படும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முன்னதாக சரவணன் அருள் படம் குறித்த ப்ரோமோஷன் விழாக்களில் நாயகன் பேசிய வீடியோக்கள் வைரலாகி வந்தன.  அதோடு இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது. முன்னணி நாயகிகளை முன்னிறுத்தி வெளியான இவரது டிரைலரும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. 

மேலும் செய்திகளுக்கு....The Legend Twitter Review : அதிகாலையில் குவிந்த ரசிகர்கள்...கலைக்கட்டும் தி லெஜண்ட்

 

இன்று வெளியாகி உள்ளது லெஜென் படத்தின் வசூல் குறித்த எதிர்பார்ப்பு தான் ஹாலிவுட் வட்டாரத்தில் பற்றி கொண்டுள்ளது. படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இந்தப் படம் காமெடி ஸ்கூப் திரைப்படம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு  தி லெஜண்ட் படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..ஒரே நாளில் இத்தனை அப்டேட்டா..! அடுத்தடுத்து வந்த அப்டேட்டுகளால் திக்குமுக்காடிப் போன தனுஷ் ரசிகர்கள்

அதாவது இன்று நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமரின் வருகை, போட்டியாளர்களின் வருகையால் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தி லெஜெண்ட் படத்திற்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாயகன் உட்பட குழுவினர் முதல் நாள் ஓப்பனிங் நல்ல கல்லாகட்டும் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். அதோடு நெட்டிசன்கள் தி லெஜெண்ட் படத்திற்காகவே நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios