ஒருபக்கம் அப்டேட்ஸ்.. மறுபக்கம் குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் தனுஷ் - வைரல் போட்டோஸ் !
நாளை நடிகர் தனுஷ் தனது 40வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தற்போது அவர் நடிக்கும் படங்களில் இருந்து வரிசையாக வரும் அப்டேட்களால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் சிங்கிளான தாய் கிழவி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இரண்டாவது சிங்கிளான மேகம் கருக்காதா என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிளான லைப் ஆஃப் பழம் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஒரே நாளில் இத்தனை அப்டேட்டா..! அடுத்தடுத்து வந்த அப்டேட்டுகளால் திக்குமுக்காடிப் போன தனுஷ் ரசிகர்கள்
நாளை தனுஷ் தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் இணையத்தில் அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.நாளை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாக இருக்கிறது.
தனுஷ் ரசிகர்களுக்கு மற்றொரு ஹாப்பி செய்தியும் வெளியாகி இருக்கிறது. செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணையும் படம் 'நானே வருவேன்'. படத்தை தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார். தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் செல்வராகவனும் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..‘வாத்தி’ கம்மிங் ஒத்தே... பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்த தனுஷ்
இந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து வரும் அப்டேட்களால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் தனுஷ், செல்வராகவன், தந்தை கஸ்தூரி ராஜா, தாய், சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் என கூட்டு குடும்பமாக எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.