‘வாத்தி’ கம்மிங் ஒத்தே... பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்த தனுஷ்
Vaathi first look : வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் தடம்பதித்த நடிகர் தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அங்கு இவர் நடிக்கும் முதல் படம் வாத்தி. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் அவர் சாந்தமாக அமர்ந்து எழுதியபடி இருக்கும் புகைப்படம் இடம்பெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்... என்னது நிர்வாணமாக நடித்தேனா? உண்மையை உடைத்த இரவின் நிழல் நாயகி!
வழக்கமாக தனுஷ் மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தான் படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிடுவர். ஆனால் வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வாத்தி பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளதால் தற்போதே அதற்கான கொண்டாட்டங்களை தனுஷ் ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.
இதுமட்டுமின்றி நாளை மாலை 6 மணிக்கு வாத்தி படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தனுஷ் நடித்துள்ள மற்றொரு படமான திருச்சிற்றம்பலம் குறித்த அப்டேட்டும் வெளியிடப்பட உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் படு குஷியில் உள்ளார்கள். தனுஷின் பெயரை டுவிட்டரிலும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... லட்ச ரூபாய்க்கு 20 ரூபாய் காயின்கள்... சில்லறை காசுகளை கொடுத்து புது கார் வாங்கிய யூடியூபர் இர்பான்