லட்ச ரூபாய்க்கு 20 ரூபாய் காயின்கள்... சில்லறை காசுகளை கொடுத்து புது கார் வாங்கிய யூடியூபர் இர்பான்
Irfan view : யூடியூபர் இர்பான் 2 லட்சம் மதிப்புள்ள புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார், அதுவும் ரூ.20 காயின்களை சில்லறையாக கொடுத்து வாங்கி உள்ளார்.
யூடியூப்பில் உணவு ரிவ்யூ செய்து பேமஸ் ஆனவர் இர்பான். இவரது இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை 30 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். யூடியூபில் பாப்புலராக இருக்கும் இவர் சில சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் இவர் ரிவ்யூ செய்த ஓட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டது.
அங்கு இருந்து கெட்டுப் போன சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் ஆகா ஓகே என ரிவ்யூ செய்த ஓட்டலுக்கு சீல் செய்யப்பட்டதை அடுத்து இர்பான் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தான் அந்த உணவகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரிவ்யூ செய்ததாகவும், அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவுகள் நல்லா இருந்ததால் தான் நான் அப்படி ரிவ்யூ செய்தேன் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இர்பான்.
இதையும் படியுங்கள்... அம்பானி உடன் கூட்டணி... புது பிசினஸில் கால்வைக்கும் நடிகர் விஜய் - என்ன பண்ணப்போகிறார் தெரியுமா?
யூடியூபில் உணவு மட்டுமின்றி கார்களையும் ரிவ்யூ செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் இர்பான். இந்நிலையில், தற்போது தான் 2 லட்சத்திற்கு முழுவதும் 20 ரூபாய் காயின்களை சில்லறையாக கொடுத்து புது கார் ஒன்றை வாங்கி உள்ளதாக கூறி ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோவில் தான் எதற்காக அந்த காரை சில்லறை காசுகளை கொடுத்து வாங்கினேன் என்பதையும் விளக்கி உள்ளார்.
அதன்படி 20 ரூபாய் குறித்து மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும் 10 ரூபாய் காயின்கள் செல்லாது என வதந்தி பரவுவது போல் 20 ரூபாய் காயின்களும் செல்லாது என பல பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு 20 ரூபாய் காயின்கள் இருக்கிறதா என்பது கூட தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் 20 ரூபாய் காயின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இந்த காரை முழுவதும் சில்லறை காசுகளை கொடுத்து வாங்கியதாக கூறி உள்ளார். இந்த காரை தனது தங்கை தான் வாங்கி உள்ளதாகவும், அவருக்கு சில்லறை மாற்றி கொடுத்தது நான் தான் என்றும் இர்பான் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..பச்சை வண்ண டவுசர் மட்டும் அணிந்து...அலப்பறை பண்ணும் நாயகி!