நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கங்குவா பட ஃபயர் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் படு பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிவா இயக்கி உள்ளார். இதுவரை வீரம், சிறுத்தை, விஸ்வாசம், அண்ணாத்த என தொடர்ந்து கமர்ஷியல் ஹிட் படங்களாக இயக்கி வந்த சிவா, முதன்முறையாக வரலாற்று கதையம்சம் கொண்ட ஃபேண்டஸி திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.

கங்குவா திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்தின் முதல் பாகத்திற்கான ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி கங்குவா திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... எதையும் சாதிக்க முடியும் என்று கற்றுத்தந்தவர்! அண்ணன் சூர்யாவுக்கு கார்த்தி கூறிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கங்குவா படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் அப்படத்தின் அப்டேட்டும் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளது. அதன்படி கங்குவா திரைப்படத்தின் நாயகன் சூர்யாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. ஃபயர் சாங் என பெயரிடப்பட்டுள்ள அப்பாடல் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டு உள்ளது.

அப்பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் கணேஷ், விஎம் மகாலிங்கம், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடலுக்கு விவேகா பாடல் வரிகளை எழுதி உள்ளார். தலைப்பை போலவே அனல்பறக்கும் வரிகளுடன் கூடிய இப்பாடல் தற்போது யூடியூப்பில் லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளி வருகிறது. இப்பாடல் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

Fire Song (Tamil) - Lyrical | Kanguva | Suriya | Devi Sri Prasad | Siva | Viveka

இதையும் படியுங்கள்... ரோலெக்ஸுக்கே டஃப் கொடுக்கும் கேங்ஸ்டராக மிரட்டும் சூர்யா... பர்த்டே ட்ரீட் ஆக வெளிவந்த Suriya 44 அப்டேட்