- Home
- Gallery
- சூர்யாவை விட அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா; இவர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு இவ்வளவா?
சூர்யாவை விட அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா; இவர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு இவ்வளவா?
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Suriya - jyothika
கோலிவுட்டில் கொண்டாடப்படும் நட்சத்திர காதல் ஜோடி என்றால் அது சூர்யா - ஜோதிகா தான். சினிமா மட்டுமன்றி ரியல் லைஃபிலும் இருவரும் குறையாத காதலுடன் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்ந்தா சூர்யா - ஜோதிகா மாதிரி வாழனும் என சொல்லும் அளவுக்கு காதலிப்பவர்களுக்கு இந்த ஜோடி தான் இன்ஸ்பிரேஷனாகவும் திகழ்கின்றனர். சினிமாவிலும் பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல், காக்க காக்க, மாயாவி போன்ற படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.
Suriya wife Jyothika
சூர்யாவும் ஜோதிகாவும், குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தியா, தேவ் என இரு பிள்ளைகளும் உள்ளனர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டே விலகினார். சுமார் 7 ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர், அதன்பின்னர் 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார்.
Suriya Net Worth
மறுபுறம் சூர்யாவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இவர் 5 நிமிட கேமியோ ரோலில் வந்தாலே தியேட்டர் அதிர்கிறது. அந்த அளவுக்கு சூர்யாவின் மாஸ் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. ரூ.300 கோடிக்கு மேல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு ரூ.30 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... ஆடுகளம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு... நோ சொன்ன பார்த்திபன்; அதுவும் இந்த கேரக்டரா? நேஷனல் அவார்டு போச்சே!
Jyothika Net Worth
அதேபோல் அவரின் மனைவி ஜோதிகாவும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் பிசினஸிலும் சூர்யா - ஜோதிகா இருவரும் ஜோடியாக சாதித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். அந்நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட சூரரைப் போற்று, ஜெய் பீம், கடைக்குட்டி சிங்கம், விருமன் போன்ற படங்கள் மாஸ் ஹிட் அடித்ததால் அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்கள்.
Suriya, Jyothika Combined Net Worth
சினிமா பிசினஸ் இரண்டிலும் கோலோச்சி வரும் இந்த காதல் ஜோடியின் சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று அவர்கள் இருவரின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு குறித்து பார்க்கலாம். அதன்படி சூர்யாவை விட ஜோதிகாவுக்கு தான் அதிக சொத்துக்கள் உள்ளதாம். சூர்யாவின் சொத்து மதிப்பு வெறும் ரூ.200 கோடி தானாம். ஆனால் நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ.330 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.530 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோலிவுட்டின் பணக்கார ஜோடியாகவும் இவர்கள் திகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.. தயாராகிறார் வெற்றிமாறன்? ஒரு ஹீரோ தனுஷ் - அப்போ இன்னொருவர் யார்?