கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 44 திரைப்படத்தின் மாஸான டீஸர் ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதன்பின்னர் கோலிவுட்டில் இயக்குனராக எண்ட்ரி கொடுத்த அவர், விஜய் சேதுபதியை வைத்து பீட்ஸா என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டதோடு தேசிய விருதையும் வென்றது.

ஜிகர்தண்டா படத்தின் வெற்றிக்கு பின்னர் இறைவி, ரஜினியின் பேட்ட, விக்ரம் நடித்த மகான், தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். கடைசியாக அவர் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளிவந்தது. அப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். அப்படம் கடந்தாண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது.

இதையும் படியுங்கள்... சூர்யாவை விட அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா; இவர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு இவ்வளவா?

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சர்ப்ரைஸாக நடிகர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்த கார்த்திக் சுப்புராஜ், அவரின் 44வது படத்தை இயக்க கமிட் ஆனார். அப்படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை அந்தமானில் நடத்திய படக்குழு, அடுத்தகட்ட ஷூட்டிங்கை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

Scroll to load tweet…

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் சூர்யா 44 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வாயில் சிகரெட் உடன் மாஸான கேங்ஸ்டராக வந்து மிரட்டி இருக்கிறார் சூர்யா. அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், விரைவில் அப்படத்தின் டைட்டில் டீஸரும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... Suriya : ரசிகனின் வீட்டில் நிகழ்ந்த துயர சம்பவம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா