புது கெட்டப்பில் சூர்யா.. கார்த்தி சுப்புராஜ் ஸ்டைலில் ஒரு Period Gangster படம் - வைரலாகும் Suriya 44 Video!

Suriya 44 Update : பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று அந்தமானில் துவங்கியுள்ளது.

Suriya in complete look for suriya 44 Karthik Subbaraj padam first shot video out now ans

தமிழ் திரையுலகில் தற்பொழுது பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் பிரபல நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் கங்குவா. இதுவரை தமிழ் திரையுலகில் எடுக்கப்படாத ஒரு கதைக்களத்தை இந்தமுறை கையாண்டுள்ளார் சிவா என்று கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படமும் இது தான்.  

விரைவில் அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யாவின் 44 வது திரைப்படமாக உருவாகும் இப்படம் ஒரு பீரியட் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்தமானில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளது.

Garudan : சூரியின் கருடன்.. படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள் - வட்டாச்சியர் எடுத்த மாஸ் நடவடிக்கை!

முற்றிலும் மாறுபட்ட ஒரு கெட்டப்பில் சூர்யா ஒரு பெட்டியுடன் கடலை பார்த்து அமர்ந்தபடி உள்ள முதல் காட்சி இப்பொது படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ம் ஆண்டு வெளியான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பீட்ஸா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரபல இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

Mani Ratnam : கோலிவுடின் சாயலை மாற்றிய "நாயகன்".. பல கல்ட் படங்களை கொடுத்த மணிரத்னம் - Net Worth எவ்வளவு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios