- Home
- Gallery
- Mani Ratnam : கோலிவுடின் சாயலை மாற்றிய "நாயகன்".. பல கல்ட் படங்களை கொடுத்த மணிரத்னம் - Net Worth எவ்வளவு?
Mani Ratnam : கோலிவுடின் சாயலை மாற்றிய "நாயகன்".. பல கல்ட் படங்களை கொடுத்த மணிரத்னம் - Net Worth எவ்வளவு?
Director Mani Ratnam : மதுரையில் கடந்த 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி பிறந்த மாபெரும் இயக்குனர் தான் மணிரத்னம், அவருக்கு வயது 68.

Nayagan
கடந்த 1983ம் ஆண்டு வெளியான "பல்லவி அணு பல்லவி" என்ற படத்தின் மூலம் இயக்குனராக கன்னட உலகில் அறிமுகமானவர் தான் மணிரத்னம். அந்த முதல் திரைப்படமே இந்திய திரையுலகையே அவரை திரும்பி பார்க்க வைத்தது.
director Maniratnam
தமிழில் பகல் நிலவு, இதய கோவில் போன்ற படங்களை இயக்கியிருந்தாலும், கடந்த 1986ம் ஆண்டு வெளியான மௌன ராகம் என்ற படத்தின் மூலம் தமிழில் புகழ்பெற்ற இயக்குனராக மாறினார் மணிரத்னம். பல விருதுகளை குவித்துள்ள மணிரத்னம், நாயகன், தளபதி, ஆயுத எழுத்து போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
Mani
கார்த்திக், சித்தார்த், சுதா கொங்கரா போல பல நல்ல திறமைகளை கோலிவுட் உலகிற்கு கொடுத்தவர் மணிரத்னம் என்றால் அது மிகையல்ல. இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்னம், ஒரு படத்திற்க்கு 2 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். இப்பொது அவருடைய சொத்து மதிப்பு சுமார் 900 கோடி என்று கூறப்படுகிறது.