நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

இதுதவிர தயாரிப்பிலும் பிசியாக உள்ளார் சூர்யா. அவர் தயாரித்த மெய்யழகன் என்கிற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கி உள்ளார். இப்படி நடிப்பு மற்றும் தயாரிப்பில் பிசியாக உள்ள சூர்யா, தன்னுடைய ரசிகர்களையும் அவ்வப்போது சந்திப்பதோடு மட்டுமின்றி அவர் வீட்டு சுப நிகழ்ச்சிகள், மற்றும் துக்க நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... 90-களில் தல தளபதியை சம்பளத்தில் மிஞ்சிய நடிகர் பிரசாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு?

Scroll to load tweet…

அந்த வகையில் சென்னையில் சூர்யா நற்பணி இயக்க தலைவர் பரமுவின் தந்தை கடந்த ஜூலை 7ம் தேதி உயிரிழந்தார். அந்த சமயத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த சூர்யா, நேற்று சென்னையில் நடைபெற்ற அவரின் 16ம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது பரமுவின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று மரியாதையும் செலுத்தினார் சூர்யா. அவர் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... என்னங்க சொல்றிங்க... ராயன் படத்தில் ரஜினியா? தனுஷ் சொன்ன சுவாரஸ்ய தகவல்; இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே பாஸ்!