சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வரும் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லம்மா செல்லம்மா' பாடலின் glimpse வீடியோ நேற்று வெளியாகிய நிலையில், ஒரே நாளில் வேற லெவல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள 'டாக்டர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லம்மா செல்லம்மா செல்லம்மா' பாடலின் glimpse வீடியோ நேற்று வெளியான நிலையில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: சுருதியையும் அழ வச்சிட்டாங்களே... 'ஒதுக்குரங்கனா நம்பள செலுத்துக்குறாங்கனு அர்த்தம்'! பஞ்ச் பேசும் இசை வாணி!

'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் (Priyanka Arul Mohan ) தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay )உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் மற்றும் 'so baby ' ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக அக்டோபர் 9 ஆம் தேதி அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்: ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்காததற்கு இது தான் காரணமா? செல்போனில் இருந்தது என்ன? அதிரடி காட்டும் NCB ..!

எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில், புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வரும் வருகிறார்கள், அந்த வகையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 'செல்லம்மா செல்லம்மா' பாடலின் Glimpse வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டனர்.

மேலும் செய்திகள்: தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தில் முன்னணி நடிகரின் மகள் நடிக்கிறாரா? அப்போ வேற லெவல் தான்..!!

சிவகார்த்திகேயனின் துடிப்பான ஆட்டமும், ப்ரியங்காவின் கியூட் ரியாக்ஷனும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. இந்நிலையில் இந்த பாடல் வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 3 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு மாஸ் சாதனையை படைத்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வேற லெவலுக்கு கொண்டாடி வருகிறார்கள்.

Scroll to load tweet…