தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தில் முன்னணி நடிகரின் மகள் நடிக்கிறாரா? அப்போ வேற லெவல் தான்..!!
தளபதி விஜய் (Thalapathy Vijay), 'பீஸ்ட்' (Beast Movie) படத்தை தொடர்ந்து நடிக்க உள்ள 66 ஆவது படத்தில், பிரபல முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் (Magesh babu Daughter) மகள் சித்தாரா (sitara) நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தளபதி விஜய் தற்போது 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்திய படக்குழு, இரண்டு, மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர்.
நான்காவது கட்ட படப்பிடிப்புக்காக, சமீபத்தில் டெல்லி சென்ற படக்குழு, படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் நிறைவடைவதற்கு முன்பாகவே, தளபதி விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி (vamsi) இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சமீபத்தில் வெளியிட்டனர்.
விஜயின் 66 வது படமாக உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு (DhilRaju) தயாரிக்கிறார். மேலும் இந்த இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க, பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து மற்றொரு சூப்பர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏற்கனவே தமிழில் பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்க்கு மகளாக நடித்த நிலையில், அவரை தொடர்ந்து மகேஷ் பாபுவின் மகள் விஜய்க்கு மகளாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.