சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'கனா' இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 23 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய, 'வாயாடி பெத்த புள்ள' என்று தொடங்கும் லிரிக்கள் வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ இரண்டே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது என்பதை சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் நடித்த ‘ராஜா ராணி, மான் கராத்தே, மரகத நாணயம், போன்ற படங்கள் இவருக்கு சிறந்த நடிகர் என்கிற அங்கீகாரத்தை கொடுத்தது. இதைதொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி பாடி உலகளவில் பிரபலமாகி விட்டார். 

இந்நிலையில் தற்போது, ‘கனா’ படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் ஏற்க்கனவே சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

அருண்ராஜா இயக்கும் ‘கனா’ படத்தின் கதைக்களம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். திபு நைனன் தாமஸ் இசையமைக, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை சிவகார்த்திகேயன், சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி படத்தின் ஆடியோ & டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை பாடகி வைக்கம் விஜயலட்சுமியுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மகள் ஆராதனாவும் பாடியுள்ளனர். இந்த பாடல் வெளியான இரண்டே நாட்களில் இந்த பாடல் 5மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ஆராதனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.