லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த 19ம் தேதி ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பட ரிலீஸ் தள்ளிப்போனது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் புண்பட்ட மனதிற்கு ஆறுதலாக மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு சாதனை படைத்து வருகின்றன.

இதையும் படிங்க: இதைவிட சின்ன டிரஸ் கிடைக்கலையா?.... குட்டை உடையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்!

குறிப்பாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அதனால் இந்த பாடலுக்கு டிக்-டாக்கில் பலரும் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் டிக்-டாக் வீடியோ ஆயிரத்து ஐநூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

இதையும் படிங்க: துளிகூட டிரஸ் இல்ல... தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த தமன்னா...!

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் டிக்-டாக்கில் முகாமிட்டுள்ளனர். போதாக்குறைக்கு சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்-டாக் வீடியோக்களை வெளியிட்டு, லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவிலும் தாறுமாறு வைரலாகி விடுகிறது. 

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக தட்டித்தூக்க பக்கா பிளான்... பெண்களுக்கு “திரெளபதி” இயக்குநர் வைத்த கோரிக்கை...!

அதேபாணியில் பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி வாத்தி கம்மிங் பாடலுக்காக டிக்-டாக்கில் சூப்பர் நடனமாடியுள்ளார். அதுவும் எப்படி தெரியுமா? மாஸ்டர் ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சியின் போது சாந்தனுவை எல்லாம் தள்ளிவிட்டு, ஒரு ஸ்டெப் போட்டார் இல்லையா? அதை அப்படியே விஜய் ஸ்டைலில் செய்து அசத்தியிருக்கார்.