இந்நிலையில் மோகன் ஜி-யின் ஹேஷ்டேக் பதிவு மட்டும் தீர்வை கொண்டு வந்துவிடுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

கொரோனா குரூரத்தால் ஊரடங்கு போடப்பட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் குடிமகன்களின் நிலை பரிதாபமாகி வருகிறது. போதைக்காக சிலர் மாற்று வழிகளை தேடி வரும் அதே வேளையில், பலரும் பாதை மாறி நல்வழிக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், அப்படியே டாஸ்மாக் கடைகளை அடைத்து விட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு குடிமகன்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், குடும்ப தலைவிகள் செம்ம ஹாப்பியாக உள்ளனர். 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அப்படியே நிரந்தரமாக மூடப்பட்டால் தங்களது வாழ்க்கையில் ஒளியேற்றியது போல் இருக்கும் என தமிழக பெண்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குடி குடியை கெடுக்கும் என்பதை சிறிதளவும் உணராத போதை பிரியர்களோ... இந்த நெருக்கடியான நேரத்தில் கூட போதையை தேடி அலைகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட திரெளபதி இயக்குநர் மோகன் ஜி சூப்பர் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்கள் ஒட்டுமொத்தமாக #NoMoreTASMAC என பதிவிடுங்கள்.. உங்கள் கோரிக்கை அரசாங்கத்திற்கு கேட்கும் வரை.. Social network மூலமாக இதை உங்களால் நடத்தி காட்ட முடியும்.. என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடக்காத போராட்டங்கள் இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் குடும்ப தலைவிகள் வரை பலரும் களத்தில் இறங்கினர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட செய்திகளையும் கேள்விப்பட்டிருப்போம். 

Scroll to load tweet…

இதையும் படிங்க: துளிகூட டிரஸ் இல்ல... தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த தமன்னா...!

இந்நிலையில் மோகன் ஜி-யின் ஹேஷ்டேக் பதிவு மட்டும் தீர்வை கொண்டு வந்துவிடுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். ட்விட்டர் மூலம் கேட்கப்படும் உதவிகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாது, பலரது கோரிக்கைகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் இந்த ஹேஷ்டேக் மூலம் எங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று தங்களது பிரச்சனைகள் குறித்து பதிவிட்டால், அது எப்படியும் முதலமைச்சர் கவனத்திற்கு செல்லும் என்று நம்பப்படுகிறது.