எனக்கு மரியாதை தான் முக்கியம்...! கமல்ஹாசனை சந்தித்த பின்னர்.. செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா! வீடியோ
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா இன்று காலை நடிகர் கமல்ஹாசனை சந்தித்த நிலையில், இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக இருந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஷர்மிளா, தான் கடந்த ஓரிரு வாரங்களாக சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்கான மாறி உள்ளார். இந்நிலையில் இன்று கமல் ஹாசனை சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஷர்மிளா பதிலளித்தார். கமல்ஹாசன் கார் வாங்குவதற்காக ஷர்மிகாவுக்கு முன் பணம் கொடுத்த நிலையில், இன்று காலை கமல் ஹாசனை சந்தித்து, அவர் கையால் காரின் சாவியை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் கமல்ஹாசன் தன்னை ஊக்கப்படுத்தும் விதமாக பேசியதாகவும்... கீழே விழுவதை கண்டு பயம் கொள்ள கூடாது, அடுத்த அடியை நாம் எடுத்து தான் வைக்க வேண்டும். பலருக்கு நீ நாளை உதவ வேண்டும் என்பது போல் அறிவுரை கூறியதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
நான் தற்கொலை செய்து கொண்டால்? அது திட்டமிட்ட கொலை! ஷாக் கொடுக்கும் டிடிஎப் வாசன்!
தற்சமயம் ஐடி நிறுவனங்களில், கார் ஓட்ட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஷர்மிளாவிடம், ஓனர் உங்களை வேலையை விட்டு செல்ல வில்லை என கூறுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த ஷர்மிளா... எனக்கு மரியாதை தான் ரொம்ப முக்கியம். என் அப்பாவை பார்த்து உன் புள்ளைய கூட்டிகிட்டு போ என கூறினார். என்னை திட்டி இருந்தால் கூட பரவா இல்லை. என் அப்பாவை அப்படி மரியாதை இல்லாமல் பேசியதால் தான் வேலையை விட்டு வெளியேறியதாகவும் கூறினார்.
அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகும் இவரின் வீடியோக்கள் பற்றி கேள்வி எழுப்பிய போது ... என்னுடைய பேருந்தில் பல கல்லூரி மாணவர்கள் ஏறுகிறார்கள். அடிக்கடி என்னை அவர்கள் வீடியோ எடுப்பார்கள். நான் வண்டி ஓட்டும் போது இப்படி செய்வது என்னை வீடியோ எடுங்கள் என கூறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று... அதே போல் பலர் என்னுடைய பெயரில் ஃபேக் ஐடி துவங்கி இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருவகாக தெரிவித்தார்.
அதே போல் இதுவரை நான் எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களையும், என் வண்டியில் வந்து ஏறும் படி அழைப்பு விடுக்கவில்லை. அப்படி யாராவது ஒருவர் கூறியதை காட்டுங்கள் என்கிறார். அரசியல் ரீதியாக கமல் உங்களிடம் பேசினாரா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு... அப்படி எதுவுமே அவர் என்னிடம் பேசவில்லை என தெரிவித்துளளார்.
இதுகுறித்த வீடியோ இதோ...