நான் தற்கொலை செய்து கொண்டால்? அது திட்டமிட்ட கொலை! ஷாக் கொடுக்கும் டிடிஎப் வாசன்!
யூடியூப் பிரபலமாக இருந்து, தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள டிடிஎப் வாசன் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வீடியோ ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதிக்க நினைப்பவர்களுக்கு யூடியூப் தளங்கள் மிகப்பெரிய வரபிராசதமாக அமைந்துள்ளது. அந்த வகையில், தனக்குள் இருக்கும் பைக் ரைடிங் திறமையை வெளிப்படுத்தி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு, 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடிஎப் வாசன், 'மஞ்சள் வீரன்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
சமீபத்தில் இவர் சென்ற கார், சென்னையில் விபத்தில் சிக்கிய நிலையில்... இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாக, இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, ’நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானால் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அது கொலை என்று புரிந்து கொள்ளுங்கள்’ என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிடிஎஃப் வாசன் தற்போது நடித்து வரும் 'மஞ்சள் வீரன்' பட இயக்குனருடன் ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நிலையில், அந்த காரை இயக்குனர் தான் ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கார் நிலைதடுமாறி சிறு விபத்தில் சிக்கியது. இதில் காரின் முன்னாள் சென்று கொண்டிருந்த ஒருவருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் எப்படியோ போகட்டும் என விட்டு விடாமல், ஒரு ஆட்டோவை பிடித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, உரிய சிகிச்சைக்கு பின்னர் பண உதவியும் செய்துள்ளனர்.
ஆனால் உண்மை தெரியாத பல மீடியாக்கள் தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறி ஆதங்கத்தை கொட்டியுள்ளார் டிடிஎஃப் வாசன். நான் தான் கார் ஓட்டியாக கூறுகிறார்கள், ஆனால் சற்றும் அதில் உண்மை இல்லை. நான் கார் ஓட்டவே இல்லை. இயக்குனர் தான் கார் ஓட்டினார். அதே போல், நான் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக செய்திகளை வெளியானது.... இன்னும் சிலர் நான் ஆட்டோவில் தப்பித்து ஓடியதாகவும் செய்திகளை வெளியிட்டார்கள். மனசாட்சியே இல்லாமல்... உண்மை என்பதை தெரிந்து கொள்ளாமல் இப்படி கூறுவது பத்திரிக்கை தர்மம் இல்லை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
ஷாருக்கானின் 'ஜவான்' பட தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை!
’என்னை எவ்வளவு புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு புண்படுத்தி வருகிறார்கள் என்று டிடிஎப் வாசன் கூறியுள்ளார். மேலும் என்னை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பலர் செயல்படுகிறார்கள். எதிர்காலத்தில் நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தால் யாரும் அதை நம்ப வேண்டாம். அது திட்டமிட்ட கொலை என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலர் TTF வாசனுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.