'மாஸ்டர்' பட நடிகர் சாந்தனு, மற்றும் கீர்த்தி இருவரும் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு அந்த பெண்ணை பெருமைப்படுத்தியுள்ளனர். இதற்கு நெட்டிசன்களுடம் தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட 'பேட்ட' பட நடிகர்! திடீர் என விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி கொடுத்த மனைவி!
 

உண்மையில் ஒருவருக்குள் உள்ள திறமையை கண்டறிவதும் ஒரு கலைதான். இப்படி பட்ட திறமைகளை எளிதில் கண்டு பிடித்திடவும் முடியாது. அந்த வகையில் நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரும் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்ணின் ஒளிப்பதிவு திறமையை கண்டறிந்து அவரை பாராட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சாந்தனு. தன்னுடைய தந்தை பெரிய இயக்குனர் என்றாலும், தன்னுடைய திறமையால் தமிழ் சினிமாவில் நிலைக்க வேண்டும் என கிட்ட தட்ட 10 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறார். 

மேலும் செய்திகள்: 18 + மட்டும் பார்க்கவும்! உடலில் ஒட்டு துணி இன்றி... டார்ச் லைட் ஒளியில் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை!
 

தற்போது தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாஸ்டர்'  திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கால், வீட்டுக்குள் இருந்தபடி, கொஞ்சம் கொரோனா நிறைய காதல் எனும் ஷார்ட் ஃபிலிம் ஒன்றை  அவர் ரிலீஸ் செய்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. 

இந்த குறும்படத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய பணி பெண் குறித்து தான் ஷாந்தனுவும் - கீர்த்தியும் புகழ்ந்து ட்விட் செய்துள்ளனர். அவர்களது வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் யுவஶ்ரீயுடன், ஷாந்தனுவும் அவர் மனைவியும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, ''எங்க குறும்படத்தின் கேமரா வுமன் இவர்தான் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: 'காக்க காக்க' படத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்! சூர்யாவுடன் ஜோரா நிற்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
 

நமக்கு தெரியாத, பல திறமைகள் இங்கு இருக்கிறது. அதை நாம் சரியாக அடையாளம் காணவேண்டும்'' என பதிவிட்டு, தனது வீட்டில் வேலை செய்யும் யுவஶ்ரீக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இவர்களின் இந்த பதிவுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.