பிரபல நடிகை, அவருடைய சிறிய வயதில் நடிகர் சூர்யாவுடன் எடுத்து கொண்ட, அரிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், டப்பிங் கலைஞராக இருந்து நடிகையாக மாறிய பலர் உள்ளனர். மேலும் நடிகையாக இருந்து கொண்டே பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருபவர்களும் உள்ளனர். 

அந்த வகையில், சிறிய வயதில் இருந்தே.... அம்மாவுடன் சேர்ந்து பல படங்களுக்கு டப்பிங் பேசி வரும் நடிகை ரவீனா ரவி, கடந்த 10 வருடங்களுக்கு முன், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், வெளியான 'காக்க காக்க' படத்தின் படப்பிடிப்பில், நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: காமெடி நடிகர் மதுரை முத்து வீட்டில் ஏற்பட்ட சோகம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
 

ரவீனா ரவி, கிட்ட தட்ட 50 படங்களுக்கு மேல், பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தமிழ் மொழி மட்டும் இன்றி, மலையாள படங்களுக்கும் டப்பிங் பேசி வருகிறார். சிறந்த டப்பிங் கலைஞருக்கான பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. பின் சில வருடங்கள் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த இவர், தற்போது 'ராக்கி', 'காவல்துறை உங்கள் நண்பன்', மற்றும் வட்டார வழக்கு' , ஆகிய ௩ படங்களில் நடித்து வருகிறார்.  இந்த படங்கள் இந்த வருடத்தின் கடைசியிலும், அடுத்த வருடமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு பெரிய வயிறு தான்..! இதுவரை வெளியிடாத அந்த ரகசியத்தை சொன்ன கனிகா !
 

மேலும் ரவீனா ரவி தான், மாஸ்டர் படத்தில் கதாநாயகி, மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.