காமெடி நடிகர் மதுரை முத்து வீட்டில் ஏற்பட்ட சோகம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
வெள்ளித்திரையில் காமெடி நடிகர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு சின்னத்திரை காமெடி நடிகர்களையும் ரசிக்கின்றனர் ரசிகர்கள். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான மதுரை முத்து, குடும்பத்தில் தற்போது அரங்கேறியுள்ள இழப்பு அவருடைய குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.
வெள்ளித்திரையில் காமெடி நடிகர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு சின்னத்திரை காமெடி நடிகர்களையும் ரசிக்கின்றனர் ரசிகர்கள். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான மதுரை முத்து, குடும்பத்தில் தற்போது அரங்கேறியுள்ள இழப்பு அவருடைய குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் செய்திகள்:ஆதவன் தன்னை முத்தமிட... குழந்தையை கொஞ்சும் எமி ஜாக்சன்..! ஹார்ட் டச்சிங் போட்டோஸ்!
காமெடி நடிகர் மதுரை முத்து 'அசத்தப்போவது யாரு', 'கலக்கப்போவது யாரு', ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று பின் தன்னுடைய திறமையால் 'சண்டே கலாட்டா' என ஒரு தனி நிகழ்ச்சி மூலம் காமெடியில் கலக்கி வந்தவர். மேலும் தற்போது பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும், காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கிறார்.
தன்னுடைய காமெடியால் சின்னத்திரை மூலம் மட்டுமின்றி அவ்வப்போது பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வெளிநாடுகளிலும் இவருடைய காமெடி பேச்சுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
மேலும் செய்திகள்: மூன்றே எழுத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஜி.வி.பிரகாஷ்! ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!
இந்த நிலையில் மதுரை முத்துவின் தந்தை, ராமசாமி வயது மூப்பு காரணமாகவும், ஒரு சில உடல்நல பிரச்சினைகளாலும் அவதி பட்டு வந்த நிலையில், நேற்று காலமானார். இந்த சம்பவம் மதுரை முத்து குடும்பத்தினரிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் தான், மதுரை முத்துவின் தாயார், வெல்லத்தாயி இறந்த நிலையில், ஒரே வருடத்தில் தன்னுடைய தந்தையையும் இழந்து நிற்கிறார் மதுரை முத்து. மேலும் சில வருடங்களுக்கு முன், இவருடைய முதல் மனைவி விபத்தில் சிக்கி இறந்தார். பின்னர் தன்னுடைய குழந்தைகளுக்காக, மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: மகளின் ஆபாச படத்தை காட்டி தாயையும் விட்டு வைக்காத காசி..! அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சிகள்!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரபலங்கள் பலர்... கொரோனா பிரச்சனை காரணமாக நேரில் சென்று ஆறுதல் கூற முடியாவிட்டாலும், தொலைபேசி வழியாக தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.