பிரபல பாலிவுட் நடிகர்  நவாஸுதின் சித்திக்கிற்கு அவருடைய மனைவி ஆலியா, திடீர் என விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக். 45 வயதாகும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் நவாஸுதீன் சித்திக், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புதனாவுக்கு சென்றுள்ளார். 

மேலும் செய்திகள்: 18 + மட்டும் பார்க்கவும்! உடலில் ஒட்டு துணி இன்றி... டார்ச் லைட் ஒளியில் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை!
 

அவர் அங்கு செல்வதற்கு முன்பு மகாராஷ்டிரா அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று, கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தப்பட்ட பின்பே, சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த சனிக்கிழமை அவர் சொந்த ஊர் சென்றடைந்துள்ளனர். 

இதையடுத்து வெளியூருக்கு சென்றுள்ளதால் அடுத்த 14 நாட்களுக்கு நவாஸுதீன் சொந்த ஊரிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், என்பது குறித்து ஏற்கனவே நமது தளத்தில் தெரிவித்திருந்தோம். 

மேலும் செய்திகள்: 'காக்க காக்க' படத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்! சூர்யாவுடன் ஜோரா நிற்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
 

இந்நிலையில், நவாஸுதீன் சித்திக் மனைவி, இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய லாயர் மூலம் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தற்போது தபால் நிலையங்கள் செயல்படாததால், இந்த நோட்டீசை அவர், வாட்டஸ் ஆப் மற்றும், ஈமெயில் மூலமாக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து கூடிய விரைவில் நவாஸுதீன் சித்திக் பதிலளிக்க  வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு பெரிய வயிறு தான்..! இதுவரை வெளியிடாத அந்த ரகசியத்தை சொன்ன கனிகா !
 

இதுகுறித்து தெரிவித்துள்ள நடிகர் நவாஸுதீன். சகோதரியின், இழப்பில் இருந்து தன்னுடைய 75 வயது தாய் உட்பட குடும்பத்தினர் அனைவரும் இன்னும் மீளமுடியாமல் தவிப்பதால், நிம்மதிக்காக சொந்த ஊரில் இருப்பதாகவும் எனவே இந்த விவாகரத்து குறித்து எதுவம் கூற விருப்பம் இல்லம் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.