Asianet News TamilAsianet News Tamil

வாவ்... ஷங்கர் படத்தின் அடுத்த ஹீரோயின் இவரா? வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க 'RC15 '  படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தாற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது.
 

shankar next movie heroine is officially announced
Author
Chennai, First Published Jul 31, 2021, 12:39 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க 'RC15 '  படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தாற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வந்த 'இந்தியன் 2 ' திரைப்படம், இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இம்முறை தமிழ் பட ஹீரோக்களை வைத்து படம் இயக்காமல், தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்குவதில் இறங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: காதலன் விக்கியுடன் சேர்ந்து புது பிசினஸில் முதலீடு செய்த நயன்தாரா... உங்கள புரிஞ்சிக்கவே முடியலயே..!
 

shankar next movie heroine is officially announced

மகளின் திருமணத்தை முடித்த கையேடு இந்த படத்தின் பணியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். சமீபத்தில் கூட படம் குறித்து ஆலோசனை செய்ய ராம் சரண் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னையில் உள்ள இயக்குனர் ஷங்கரின் வீட்டுக்கு வந்த போது, மூவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, ஷங்கர் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்று.... விருது வைத்ததாக ராம் சரண் தெரிவித்திருந்தார். இதற்க்கு ஷங்கரும் பதில் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: யாஷிகா கார் விபத்துக்கு இது தான் முக்கிய காரணம்..! ஆண் நண்பரின் பகீர் வாக்குமூலம்..!
 

shankar next movie heroine is officially announced

ராம் சரண் நடித்து வந்த ஆச்சார்யா, மற்றும் RRR படங்கள் இறுதி கட்டத்தில் உள்ளதால் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பாக்கப்படும் நிலையில், அடுத்தடுத்து இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில்... இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார் என்கிற தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தின் நாயகிக்கான தேடலும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: கதவே வைக்குற அளவுக்கு டீப்நெக் ஜாக்கெட்! காட்டன் சேலையில் கும்முனு குண்டு மல்லி போல் போஸ் கொடுத்த ஷிவானி!
 

shankar next movie heroine is officially announced

'பீஸ்ட்' பட நாயகியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது யாருமே எதிர்பாராத நாயகியை ராம் சரணுக்கு ஜோடியாக கமிட் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். அதாவது சில தெலுங்கு படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் கியாரா அத்வானி தான் இந்த படத்தின் நாயகியாக கமிட் செய்யப்பட்டுள்ளார். இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இதனை உறுதி செய்து அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: ஸ்ருதிஹாசன் வயிற்றையும் விட்டு வைக்காத காதலன்..! அங்கையும் திறமையை காட்டி அசத்தி இருக்காரே... வைரல் வீடியோ..!
 

shankar next movie heroine is officially announced

இந்த படத்தை முடிந்த கையேடு, பாலிவுட் திரையுலகில் ரன்வீர் சிங்கை வைத்து... 'அந்நியன்' ரீமேக்கை ஷங்கர் கையில் எடுக்க உள்ளார். ஆனால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் திரைப்படம் எப்போது துவங்கும் என்பது குறித்த எந்த வித அறிவிப்பும் தற்போது வரை வெளியாவில்லை என்றாலும்... விரைவில் இது குறித்தும் தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios