Asianet News TamilAsianet News Tamil

ஸ்ருதிஹாசன் வயிற்றையும் விட்டு வைக்காத காதலன்..! அங்கையும் திறமையை காட்டி அசத்தி இருக்காரே... வைரல் வீடியோ..!

ஸ்ருதிஹாசனின் காதலர் சந்தனு ஒரு டூடுல் கலைஞர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதற்காக ஸ்ருதிஹாசனின் வயிற்றை கூட விட்டு வைக்காமல் தன்னுடைய கலையை காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

shanthanu wrote thuglife in shruthihassan stomach viral video
Author
Chennai, First Published Jul 30, 2021, 6:37 PM IST

ஸ்ருதிஹாசனின் காதலர் சந்தனு ஒரு டூடுல் கலைஞர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதற்காக ஸ்ருதிஹாசனின் வயிற்றை கூட விட்டு வைக்காமல் தன்னுடைய கலையை காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், தற்போது, தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'லாபம்' மற்றும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் மூன்று மொழிகளில் உருவாகி வரும் பிரமாண்ட படமான 'சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பல இயக்குனர்கள் அடுத்தடுத்து கதை கூறி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். அதே போல்... ஷூட்டிங் இல்லாத நாட்களில், மியூசிக் ஆல்பங்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.

shanthanu wrote thuglife in shruthihassan stomach viral video

ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார்.  மைக்கேல் கார்சேலை சென்னைக்கே அழைத்து வருந்து தந்தைக்கு அறிமுகப்படுத்தியது, இருவரும் தமிழர்கள் பண்பாடு படி உடைகள் அணிந்து... திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், ஸ்ருதி அவரை தான் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் என  இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ம் ஆண்டு பிரிந்தனர். வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார். 

shanthanu wrote thuglife in shruthihassan stomach viral video

ஆனால் ஸ்ருதிஹாசன் எப்போதுமே தன்னுடைய பர்சனல் விஷயங்களை அதிகம் வெளியில் பேசுவது இல்லை. அப்படியே இந்த காதல் விஷயமும் காற்றில் கரைந்து மறைந்தது. இதை தொடர்ந்து, சில நாட்கள் சிங்கிளாக சுற்றி வந்த, ஸ்ருதி திடீர் என மீண்டும் காதலில் விழுந்ததாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் காதலிப்பதாக கூறும் சாந்தனு என்கிற டூடுல் கலைஞருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றபோது இவர்கள் காதலிப்பது உறுதியானது.

shanthanu wrote thuglife in shruthihassan stomach viral video

மேலும் அடிக்கடி ஸ்ருதிஹான் காதலை இறுக்கி அணைத்தபடி இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு தங்களது காதலை வளர்த்து வருகிறார்கள். டெல்லியை சேர்ந்த சாந்தனு கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர். இருவருக்கும் காதல் தீ சற்று அதிகமாகவே கொழுந்து விட்டு எரிவதால் இருவரும் திருமணம் செய்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

shanthanu wrote thuglife in shruthihassan stomach viral video

தன்னுடைய கைவண்ணத்தை ஸ்ருதியின் வயிற்றில் காட்டியுள்ளார் காதலர் சாந்தனு. ஸ்ருதியின் வயிற்றில் இவர் "THUG LIFE ' என எழுதியுள்ளதை ஸ்ருதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதற்க்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios