Asianet News TamilAsianet News Tamil

காதலன் விக்கியுடன் சேர்ந்து புது பிசினஸில் முதலீடு செய்த நயன்தாரா... உங்கள புரிஞ்சிக்கவே முடியலயே..!

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, விரைவு சேவை உணவகங்கள் (QSR) தொழிற்துறையின் முன்னேறி வரும் 'சாய் வாலா' என்கிற டீ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். 
 

Actress nayanthara and vignesh shivan inverts new business
Author
Chennai, First Published Jul 31, 2021, 11:43 AM IST

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, விரைவு சேவை உணவகங்கள் (QSR) தொழிற்துறையின் முன்னேறி வரும் 'சாய் வாலா' என்கிற டீ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்: யாஷிகா கார் விபத்துக்கு இது தான் முக்கிய காரணம்..! ஆண் நண்பரின் பகீர் வாக்குமூலம்..!
 

நடித்து சம்பாதிக்கும் பணத்தை பல நடிகர் - நடிகைகள் தங்களுடைய எதிர்காலம் கருதி, தங்கம், வைரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீட்டிய செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் மூலம் இவர்களுக்கு, மாதம் தோறும், அல்லது வருடத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கிறது.  அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சில நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா யாரும் எதிர்பாராத விதமாக காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைத்து சாய் வாலே (Chai Waale) என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மக்கள் மத்தியில் விரைவு சேவை உணவகங்கள் அதிகம் கவனம் பெற்று வருவதால் இந்த முடிவை இவர் எடுத்துள்ளார்.

Actress nayanthara and vignesh shivan inverts new business

இவர்களை தவிர, இந்த நிறுவனத்தில் மார்க்யூ ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து சாய் வாலே ரூ .5 கோடி மதிப்பிலான நிதியைப் பெற்றுள்ளனர். மேலும் சுனில் சேத்தியா, சுனில் குமார் சிங்வி, மணீஷ் மார்டியா, யுஎன்ஐ-எம் நெட்வொர்க், மும்பையைச் சேர்ந்த ஏஞ்சல் நெட்வொர்க் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய பலர் முதலீட்டாளர்கள் பட்டியலில் உள்ளனர். 

மேலும் செய்திகள்: ஒருவேல அதுவா இருக்குமோ?... சமந்தா எடுத்த திடீர் முடிவு... காரணம் தேடி அலையும் ரசிகர்கள்...!
 

Actress nayanthara and vignesh shivan inverts new business

இதுகுறித்து 'சாய் வாலாவின்' நிறுவனர் விதுர் மகேஸ்வரி கூறுகையில்... தற்போது வந்துள்ள முதலீடு பணத்தில் இருந்து சுமார் 80 சதவீத பணத்தை 'சாய் வாலா' கடைகள் திறப்பதற்கு செலவு செய்யப்படும் என்றும். அடுத்த ஆண்டுக்குள், சுமார் 35 கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மீதி பணம் செலவினங்களுக்கு செலவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி மனைவியாக நடித்தது யார் தெரியுமா?... தெரிஞ்சா ஆடிப்போவீங்க ஆடி...!
 

Actress nayanthara and vignesh shivan inverts new business

'சாய் வாலா' கடைகள் பெரும்பாலும் அதிக மக்கள் கூடும் இடங்களான மெட்ரோ ரயில் நிலையம், மால்கள் மற்றும் நிறைய தொழில் நிறுவனங்கள் இருக்கும் இடங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு மிகவும் சுகாதாரமான முறையில் டீ மற்றும் சிற்றுண்டிகளை கொடுக்க விழைவதாகவும் அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாராவும் முதலீட்டாளராக இதில் மாறி, இந்த புது பிஸினஸை கையில் எடுத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் பலர் உங்களை புரிஞ்சிக்கவே முடியலையே என புலம்பி வருகிறார்கள்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios