சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் சமந்தா திடீரென அதில் செய்துள்ள அதிரடி மாற்றம் ரசிகர்களை சற்றே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.  

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, அதன் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிரபல குடும்பத்து மருமகளாகவே இருந்தாலும், சமந்தா சினிமாவை விட்டு விலகாமல் சரியான கதாபாத்திரங்களில் தூள் கிளப்பி வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது சமந்தாவின் கைவசம் சாகுந்தலம் என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். வெப் சீரிஸ், ஓடிடி நிகழ்ச்சிகள் என்றும் படுபிசியாக வலம் வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் சமந்தா திடீரென அதில் செய்துள்ள அதிரடி மாற்றம் ரசிகர்களை சற்றே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதாவது சமந்தா தன்னுடைய ட்விட்டர் கணக்கின் பெயரை அவருடைய முதல் எழுத்தான ‘எஸ்’ என மாற்றியுள்ளார். இந்த பெயர் மாற்றத்தை ட்விட்டரில் மட்டுமே சமந்தா செய்துள்ளார், தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. இன்ஸ்டாகிராமில் மட்டும் ‘எஸ் பிலீவ்’ என பதிவிட்டுள்ளார். 

இதைப் பார்க்கும் ரசிகர்கள் சமந்தா ஏன் திடீர் என தன்னுடைய பெயரை மாற்றினார் என குழம்பி வருகின்றனர். ஏதாவது பட புரோமோஷன் அல்லது புதிதாக தொடங்கப்போகும் பிசினஸ் லோகோவிற்கான விளம்பரமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இல்லையெல் சமீபகாலமாக ஆன்மீகத்தில் தீவிரம் காட்டும் சமந்தா, நியூமராலஜி பார்த்து பெயரை மாற்றியுள்ளரா? என சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.