சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி மனைவியாக நடித்தது யார் தெரியுமா?... தெரிஞ்சா ஆடிப்போவீங்க ஆடி...!
சில காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களை உற்று நோக்க வைத்த ரங்கன் வாத்தியார் மனைவியாக நடித்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Sarpatta Parambarai
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் போன்ற சில பாத்திரங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறும் என்ற பழைய விதிகளை எல்லாம் உடைத்து, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சின்னஞ் சின்ன கதாபாத்திரங்கள் கூட நம் மனதில் நங்கூரமிட்டுள்ளனர்.
sarpatta parambarai
ரங்கன் வாத்தியாராக பசுபதி நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பில் வேற லெவலுக்கு அசத்தியுள்ளார். அவரது மகன் வெற்றிச்செல்வனாக கலை முதலில் குழப்பமான கதாபாத்திரமாக இருந்தாலும் கடைசியில் ஸ்கோர் செய்துவிடுகிறார். ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் டாடியாக நடித்து அசால்ட் செய்திருக்கிறார் ஜான் விஜய், வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் துஷாரா விஜயன் பின்னிபெடலெடுத்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் வரும் வேம்புலி, டான்சிங் ரோஸ் இருவரும் ரசிகர்கள் மனதை கவர்ந்துவிட்டனர்.
Sarpatta Parambarai
சார்பட்டா பரம்பரை படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்றும்,ரஞ்சித் கேட்டும் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்றும் பல்வேறு பிரபலங்கள் புலம்பி வருகின்றனர். அப்படியிருக்க இந்த படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களை உற்று நோக்க வைத்த ரங்கன் வாத்தியார் மனைவியாக நடித்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Sarpatta Parambarai
தமிழ் திரையுலகில் இயக்குநர் சிகரம் என புகழப்பட்ட கே.பாலச்சந்தர் அவர்களின் மகன் கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம் தான் இவர். கே.பாலச்சந்தரின் மருமகள். சிறந்த எழுத்தாளரான கீதா கைலாசம், நடிகையாகவும் சார்பட்டா பரம்பரை படத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளார்.