Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானுக்கு ரூ.45 கோடி நிதி உதவி செய்தாரா நடிகர் ஷாருக் கான்?

’அமிதாப் பச்சன்,அமீர்கான்  போன்ற நடிகர்கள் புல்வாமா வெடிகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் வேளையில், ஷாருக் கான் போன்ற தேச துரோகிகள் பாகிஸ்தானுக்கு ரூ. 45 கோடி நிதி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று ட்விட்டர் சிறு சிறு வீடியோ துணுக்குகள் மூலம் பரப்பப்படும் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

rumours about sharukh khan
Author
Mumbai, First Published Feb 21, 2019, 4:54 PM IST

’அமிதாப் பச்சன்,அமீர்கான்  போன்ற நடிகர்கள் புல்வாமா வெடிகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் வேளையில், ஷாருக் கான் போன்ற தேச துரோகிகள் பாகிஸ்தானுக்கு ரூ. 45 கோடி நிதி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று ட்விட்டர் சிறு சிறு வீடியோ துணுக்குகள் மூலம் பரப்பப்படும் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.rumours about sharukh khan

கடந்த இரு தினங்களாக இச்செய்தியை சில விஷமிகள் திட்டமிட்டு பரப்பி வருவதாகவும், அவர்களது தொடர்பு முகவரியை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருவதாகவும் தெரிகிறது. ஆனால் 45 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவை உண்மை என்று நம்பி ‘ஷாருக் கான் நீ ஒரு இந்திய துரோகி. இந்தியாவில் சம்பாதிப்பதை பாகிஸ்தானுக்கா கொடுக்கிறாய்’ என்று மிரட்டியும் பரப்பியும் வருகிறார்கள்.rumours about sharukh khan

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து லாகூருக்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி ஒன்று, பஞ்சாப் மாகாணம் பகவல்பூர் என்ற இடத்துக்கு அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று கவிழ்ந்தது. இந்தத் தகவல், அருகில் உள்ள மசூதி மூலம் எச்சரிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், மக்கள் தங்களிடமிருந்த பாத்திரங்கள் மற்றும் வாளிகளை எடுத்துக் கொண்டு  எரிபொருளை  எடுப்பதற்காகச் சென்றனர்.  அப்போது, எதிர்பாராத விதமாக அது வெடித்துச் சிதறியதால் பெண்கள், குழந்தைகள் உட்பட  153 பேர் பலியாயினர். 

இந்த விபத்துக்குத்தான் நிவாரண உதவித்தொகையாக ஷாருக் கான் 45 கோடி அனுப்பி வைத்ததாகவும் ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் 50 பேர் பலியாகும்போது ஒரு பைசா கூட தராமல் மவுனம் காக்கிறார் என்றும் வதந்தி பரப்புகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios