நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஆர்.ஜே. வைஷ்ணவி. தற்போது இவர் மிகவும் கவர்ச்சியான  உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒருவரை பற்றி மற்றவர்களிடம் குறை கூறி வருவதாக, தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. 

பிரபல பத்திரிக்கையாளராக இருந்த சாவி என்கிற சா.விஸ்வநாதனின் பேத்தி தான் இந்த வைஷ்ணவி. இவருடைய தாத்தா,  சாவி என்கிற பத்திரிக்கையை துவங்கி பல சினிமா கட்டுரைகள் மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.

இந்த பிரபலத்தின் பேத்தியான வைஷ்ணவியும் ஒரு விதத்தில் மிகவும் பிரபலம் தான். 104.8 சென்னை வானொலியில் பல வருடங்களாக ஆர்.ஜே.வாக வேலை செய்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து பேசி அதன் மூலம் பிரபலமானவர்.

இந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.   மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரியல் தம்பதிகளாக நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்தியா இருவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் இவர் நிகழ்ச்சியின் வைஷ்ணவி ஆரம்பத்தில் இருந்தே  ஒருவரை பற்றி மற்றொருவரிடம், கோலி மூட்டி கொண்டு இருந்ததால் இவர் மீது பலருக்கு சலிப்பு தட்டியது.  எனினும் இவர் உண்மையான முகத்தோடு விளையாடுகிறார் சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்தனர்.  

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் நடிகை சுஜா வருணி கொடுத்ததுபோல வெளியேற்றப்பட்டு சில நாட்கள் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டு பின்  மீண்டும் உள்ளே வரும் வாய்ப்பை வைஷ்ணவி பெற்றார். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது வைஷ்னவி பிரபல நடிகைகள் கூட வெளியிடத் தயங்கும் மோசமான பிகினி உடையோடு  மிகவும் கவர்ச்சிகரமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.