மோடியையும், ராகுல் காந்தியையும் ஒப்பிட முடியாது: அஜித் பவார்!

பிரதமர் மோடியையும், ராகுல் காந்தியையும் ஒப்பிட முடியாது என மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்

You cannot compare Rahul Gandhi with PM Modi says Maharashtra Deputy CM ajith pawar smp

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 370 இடங்களில் தனித்தும், 400 இடங்களுக்கு மேல் கூட்டணியுடன் வெற்றி பெறவும் பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த இரண்டு முறை போலவே இந்த முறையும் பிரதமர் மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி களமிறங்கியுள்ளது. நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். மக்களும் மீண்டும் மோடி வர வேண்டும் என விரும்புவதாக பிரசாரக் கூட்டங்களில் மோடியே கூறி வருகிறார்.

அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பாக பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடியும் இதுகுறித்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். “இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள். ஓராண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் உலகம் நம்மை பார்த்து ஏளனம் செய்யும். உங்களுக்கு ஓராண்டுக்கு ஒரு பிரதமர் தேவைதானா?” என பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாங்கள் ஓராண்டுக்கு ஒரு பிரதமரை கூட ஏற்றுக் கொள்வோம், ஆனால் நிச்சயமாக மோடியை பிரதமராக வர விடமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் புகாரில் சிக்கய தேவகவுடா பேரன் நாளை கட்சியிலிருந்து நீக்கம்: குமாரசாமி தகவல்

இந்த நிலையில், பிரதமர் மோடியையும், ராகுல் காந்தியையும் ஒப்பிட முடியாது என மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் 65 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், பிரதமர் மோடி பிரதமராக வேண்டும் என்று கூறுகின்றனர். 2019இல் நிதிஷ் குமார் என்ற பெயரை அனைவரும் கூறினர். ஆனால், நிதிஷ் குமார் இப்போது பிரதமர் மோடியுடன் இருக்கிறார். இப்போது அப்படியொரு பெயர் இல்லை. ராகுல் காந்தியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட முடியாது.” என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அனைவரிடமும் கூறி வருகிறார். அதற்கு மக்கள் கண்டிப்பாக நன்றாக பதிலளிப்பர். சூழல் நன்றாக உள்ளது. பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios