சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Retro Movie
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

கலவையான விமர்சனத்தைப் பெற்ற ரெட்ரோ
கதாநாயகியை தேடி அந்தமானுக்கு செல்லும் கதாநாயகன், கருந்தீவு பகுதியில் வேலைக்காக சென்ற மக்கள் அடிமை போல் நடத்தப்படுவதை பார்க்கிறார். பின்னர் தானும் அந்த மக்களைச் சேர்ந்தவன் தான் என்பதை அறிந்து கொள்கிறார். அந்த மக்களை அடிமைத்தனத்திலிருந்து எப்படி மீட்டார் என்பது தான் படத்தின் மையக்கரு. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்த போதிலும், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

ஓடிடி ரிலீஸ் எப்போது?
முதல் பாதி மெதுவாக சென்றதாகவும், இரண்டாவது பாதி சோர்வை ஏற்படுத்தியதாகவும், எமோஷனல் கனெக்ட் கிடைக்கவில்லை என்றும் ரசிகர்கள் கலவையான கருத்துக்களை கூறி வந்தனர். இருப்பினும் படம் ரூ.235 கோடி வசூல் பெற்றிருப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன சூர்யா
‘ரெட்ரோ’ திரைப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படத்தைப் பார்க்கலாம். தொடர்ந்து சூர்யா ஆர்.கே பாலாஜியின் இயக்கத்திலும், ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
