பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு, ஆர்.டி.ஓ அதிகாரி லாவண்யா விரைந்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிணவறை ஸ்டெக்சரில் சடலமாக கிடக்கும் விஜே சித்ரா... மனதை பதறவைக்கும் போட்டோஸ்..!
 

நடிகை விஜே சித்ரா நேற்று ஷூட்டிங் முடிந்து... நசரத்பேட்டை ஓட்டலில் தங்கியுள்ளார். இவருடன் இவரது வருங்கால கணவர் ஹேமத்தும் உடன் இருந்தார். இருவருக்கும் நேற்று இரவு என்ன பிரச்சனை நடந்தது என்பது இதுவரை வெளியாகாத நிலையில், மன அழுத்தம் காரணமாக சித்ரா அவர் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ஹேமத் உள்ளே சென்று பார்த்த போது தான் சித்ரா தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: கொரோனா நேரத்தில் மலர்ந்த சித்ராவின் காதல்..! இந்த விஷயம் தெரியுமா?
 

ஆனால் சித்ராவின் கன்னத்தில் உள்ள ரத்த காயங்கள் இவரது மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் சித்ராவின் தாயும், தந்தையும் தங்களது மகள் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் சித்ராவின் தற்கொலை குறித்து போலீசார், ஹேமந்தை துருவி துருவி விசாரணை செய்ததில், இவர்கள் இருவருக்கும் அக்டோபர் மதம் 19 ஆம் தேதி பதிவு திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே திருமணம் ஆகி 7 வருடங்களுக்குள் இறந்துள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: என் மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை..! கண்ணீர் விட்டு கதறும் சித்ராவின் தாய்..!
 

அதன்படி முகப்பேர் மேற்கு கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ஆர்.டி.ஓ அதிகாரி லாவண்யா, சித்ராவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கீழ் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.