- Home
- Cinema
- கருத்து
- Bhishmar Review : தயான் சீனிவாசனின் 'பீஷ்மர்' படம் அடிபொலியாக இருந்ததா? இல்லையா? விமர்சனம் இதோ
Bhishmar Review : தயான் சீனிவாசனின் 'பீஷ்மர்' படம் அடிபொலியாக இருந்ததா? இல்லையா? விமர்சனம் இதோ
ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் இயக்கத்தில் தயான் சீனிவாசன், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஹீரோக்களாக நடித்துள்ள 'பீஷ்மர்' திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனம் இதோ.

Bhishmar Movie Review
ஒரே ராத்திரியில் நடக்கிற சம்பவங்களை வெச்சு மலையாளத்தில் நிறைய படங்கள் வந்திருக்கு. பெரும்பாலும் அது கிரைம், இன்வெஸ்டிகேஷன் ஜானர்லதான் இருக்கும். கடைசியாக வந்த 'பாதிராத்ரி' கூட அப்படியான ஒரு படம்தான். ஆனால், இந்த ஜானர்களில் இருந்து விலகி, ஒரே இரவில் நடக்கும் காதல், சண்டை, சென்டிமென்ட், காமெடின்னு எல்லாத்தையும் கலந்து ஒரு படம் தியேட்டருக்கு வந்திருக்கு. அதுதான் 'பீஷ்மர்'. ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் இயக்கியுள்ள இந்த படத்தில் தயான் சீனிவாசன் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை ஒரு ரொமான்டிக்-காமெடி-ஃபேமிலி என்டர்டெயினர்னு சொல்லலாம்.
பீஷ்மர் படத்தின் கதை
படத்தோட கதை பாலக்காடு பின்னணியில் நடக்குது. காய்கறி கடை வைத்திருக்கும் முருகன் என்பவரின் வாழ்க்கையைச் சுற்றிதான் கதை நகர்கிறது. ஒரு விபத்துக் காட்சியுடன் படம் ஆரம்பமாகுது. பிறகு, பாலக்காடு அக்ரஹாரம், அங்கு வசிக்கும் முருகன் மற்றும் கௌரியின் வாழ்க்கைக்குள் படம் நம்மை அழைத்துச் செல்கிறது. தனது காதல் தோல்வியை மறக்க முடியாமல் வாழும் முருகனின் வாழ்க்கையில், ஒருநாள் இரவு அரவிந்தன் என்ற இளைஞன் நுழைகிறான். சிறிது நேரத்தில், அவன் காதலிக்கும் ரசியா என்ற பெண்ணும் வருகிறாள். அதன் பிறகு முருகனின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
பீஷ்மர் படத்தின் விமர்சனம்
மேலே சொன்ன கதாபாத்திரங்களுடன் இன்னும் சிலரும் சேரும்போது, கதை வேறு ஒரு தளத்திற்கு செல்கிறது. ஒருபுறம் அரவிந்தன் - ரசியாவின் காதல் கதை செல்ல, அதற்கு இணையாக முருகனின் பழைய காதல் கதையும் சொல்லப்படுகிறது. இறுதியில் இந்த இரண்டு காதல் கதைகளும் எங்கு சென்று முடிகிறது என்பதுதான் 'பீஷ்மர்' படத்தின் சுவாரஸ்யமான விஷயம். முருகன் கதாபாத்திரத்தில் தயான் சீனிவாசன் நடித்துள்ளார். ஒரு காய்கறி கடைக்காரர், காதல் தோல்வியில் வாடும் காதலன், சில இடங்களில் மாஸ் என தயான் தன் நடிப்பில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். விஷ்ணு உன்னிகிருஷ்ணனின் கதாபாத்திரம் ஒரு சஸ்பென்ஸ். அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ, அதை அவர் சரியாகக் கொடுத்துள்ளார்.
பீஷ்மர் படத்தின் ரிவ்யூ
திவ்யா பிள்ளையின் கௌரி, அமெரா நடித்த ரசியா ஆகிய கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுடன் இந்திரன்ஸ், உன்னி லாலு, ஷாஜு ஸ்ரீதர், அகில் கவலயூர், செந்தில் கிருஷ்ணா, ஜிபின் கோபிநாத், வினீத் தட்டில், சந்தோஷ், பினு திருக்காக்கரா, மணிகண்டன் ஆச்சாரி, அபு சலீம், ஜெயன் சேர்த்தலா, சோஹன் சீனுலால், விஷ்ணு க்ரூவி, ஸ்ரீராஜ், ஷைனி விஜயன், ஸ்மிருதி பாண்டே என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். அனைவரும் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளனர். ஈஸ்ட் கோஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் எட்டாவது படம் இது. அன்சாஜ் கோபி கதை எழுதியுள்ளார். ரதீஷ் ராம் ஒளிப்பதிவு செய்ய, ஜான்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

