- Home
- Cinema
- தொலைக்காட்சி
- எட்டப்பன் வேலையை ஆரம்பித்த சந்திரகலா! திருந்தவே திருந்தாத மனுச ஜென்மம்! கார்த்திகை தீபம் அதிரடி எபிசோட்!"
எட்டப்பன் வேலையை ஆரம்பித்த சந்திரகலா! திருந்தவே திருந்தாத மனுச ஜென்மம்! கார்த்திகை தீபம் அதிரடி எபிசோட்!"
Karthigai Deepam Serial Today 1155th Episode in Tamil : திரும்பவும் வீட்டிற்குள் வந்த சந்திரகலா வந்த உடனேயே எட்டப்பன் வேலையை ஆரம்பித்துவிட்டார். மயில்வாகனம் ஹோட்டல் பிஸினஸ் பற்றி அக்காவிடம் மாட்டிவிட்டுள்ளார்.

Karthigai Deepam serial today episode
கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலா டிராமா போட்டு மீண்டும் தனது அக்காவின் வீட்டிற்குள் வந்துள்ளார். ஆனால், அதில் ஒரு நல்ல விசயம் என்னவென்றால், சிவனாண்டி கட்டிய தாலியை அவரிடம் கொடுத்துவிட்டு அவருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பஞ்சாயத்து மூலமாக கூறிவிட்டார். அதோடு அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. ரேவதி மற்றும் கார்த்திக்கை பிரிக்க திட்டம் போட்ட சந்திரகலாவிற்கு இப்போது தனது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
Zee Tamil Karthigai Deepam
எனினும், சந்திரகலா தாலியை கழற்றி கொடுத்த நிலையில் மன வேதனையிலிருந்த சிவனாண்டி விஷம் குடித்துவிட்டார். எப்படியோ முத்துவேல் அவரை காப்பாற்றிவிட்டார். இதைப் பற்றி சந்திரகலாவிடம் சொல்லவே, தான் எப்போது உங்களுக்காகவே இருப்பேன் என்று சந்திரகலா வாக்குறுதி கொடுத்தார். மேலும், இப்போது உள்ள சூழலில் யாருக்கும் தெரியாமல் நாம் இருவரும் சந்தித்துக் கொள்ளலாம் என்றார்.
ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
Rohini and Mayilvahanam
இதைத் தொடர்ந்து சும்மா காமெடியனாக இருந்த மயில்வாகனத்தை தண்டச்சோறு அப்படி இப்படி என்று பேசி திட்டி தீர்த்து இப்போது ஒரு பிஸினஸ்மேன் லெவலுக்கு வர முக்கிய காரணமாக இருந்துள்ளார். தனது கணவர் சிவனாண்டி மூலமாக விஷயத்தை தெரிந்து கொண்ட சந்திரகலா இதைப் பற்றி அதாவது மயில்வாகனம் ஹோட்டல் பிஸினஸ் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதற்காக தனது அக்காவிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரை ஏற்றிவிட்டார். ரோகிணி வீட்டுக்காரர் ஹோட்டல் பிஸினஸ் செய்ய பணம் ஏது, யார் பணம் கொடுத்தா? உனக்கே தெரியாமல் அவர் ஹோட்டல் பிஸினஸ் ஆரம்பிக்கிறார்? இதையெல்லாம் நீ கேட்க மாட்டீயா என்றெல்லாம் சொல்லி ஏற்றி விட்டார்.
Mayilvahanam Hotel Business
இதனால், மன வேதனை அடைந்த சாமுண்டீஸ்வரி, மயில்வாகனம் வீட்டிற்கு வந்ததும் அவரிடம் இதைப் பற்றி கேட்டார். அதற்கு அத்தை இத்தனை நாட்களாக நாங்கள் இருவரும் அப்படியே இருந்துவிட்டோம். இனி எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது. இனிமேலும், அப்படி இருக்க முடியாது அல்லவா, அந்த குழந்தையை வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும் என்று நிறைய கனவுகள் இருக்கிறது என்றார்.
கைமாறிய பணம்.. விஜய் - த்ரிஷா விவகாரத்தின் பின்னணியில் இவ்வளவு விஷயமா?
Karthigai Deepam serial today episode
அதற்கு என்னிடம் கேட்டால் நான் பணம் கொடுத்திருப்பேன் என்றார். ஆனால், அதற்குள்ளாக அம்மா, நீங்கள் பணம் கொடுத்தால் அதற்கும் சித்தி ஏதாவது சொல்லுவாங்க. ரேவதி வீட்டுக்காரர் பணம் தரவில்லை. வங்கி லோனுக்கு மட்டும் ஏற்பாடு செய்து கொடுத்தார். கண்டிப்பாக ஹோட்டல் திறப்பு விழா உங்களது தலைமையில் தான் நடக்கும் என்றார். அதற்கு சந்திரகலாவோ சும்மா இருந்தவனை நம்ம தான் உசுப்பேத்தி விட்டு இப்போது பிஸினஸ் மேன் ரேஞ்சுக்கு வளர்த்துவிட்டோமோ என்று தனக்கு தானே பேசிக்கொண்டார்.